search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கு"

    • அமலாக்கத்துறை இதுவரை எட்டு முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    • முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் இடைக்கால ஜாமின் பெற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் இன்று ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் தேசிய அரசியல் கட்சியான ஆம் ஆத்மி கட்சியை குற்றம்சாட்டப்பட்டவராக அமலாக்கத்துறை இணைத்துள்ளது. அதேபோல் குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரையும் இணைத்துள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் பணமோசடி என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை அமலாக்கத்துறை எட்டு முறை இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் தற்போது முதன்முறையாக அரவிந்த கெஜ்ரிவால் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

    குற்றம்சாட்டப்பட்டவராக ஆம் ஆத்மி கட்சியை பெயரை இணைத்துள்ளதால் அந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என தகவல் தெரிவிக்கின்றன.

    ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத முடியும். கட்சியின் சொத்துகளை முடக்க முடியும். டெல்லியில் உள்ள தலைமைக் கழகம் உள்ளிட்ட சொத்துகளை முடக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
    • ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகும் இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இன்று உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. தேர்தல் காரணமாக முன்ஜாமின் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு அமலாக்கத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகும் இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பான மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், இன்று மாலைக்குள் திகார் ஜெயிலில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.

    விசாரணை நடைபெற்று நீண்ட நாட்கள் கழித்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட 21 நாட்கள் மாறுபாட்டை உருவாக்கிவிடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அமலாக்க வழக்கின் தகவல் அறிக்கை 2022 ஆகஸ்ட் மாதம் பதிவு செய்துள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம்தான் கைது செய்யப்பட்டார் என நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
    • இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.

    இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    • அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
    • மக்களவை தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து யோசிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவிப்பு.

    டெல்லி மாநல மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அவர் தற்போது திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பு சார்பில் வாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்றால், நாங்கள் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம். அதனால் மே 5-ந்தேதி (நேற்று) இருதரப்பு தயாராக வர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    நேற்று இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது இடைக்கால ஜாமின் வழங்கினால், அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்து. அதற்கு அவர்களும் கையெழுத்திடமாட்டார் என உறுதியளித்தது.

    அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்தி வைத்தது. அடுத்த விசாரணை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை மார்ச் 10) அல்லது அடுத்த வாரம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

    இந்த நிலையில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை மே 10-ந்தேதி) இது தொடர்பான விசாரணை நடைபெறும். அன்றைய தினம் இடைக்கால ஜாமின் குறித்து உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா? என்பது வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.

    ×