search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோலார்பேட்டை"

    ஜோலார்பேட்டையில் மகள் இறந்த துக்கத்தில் தாயாரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. பீடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூ என்ற கோவிந்தம்மாள் (வயது 45). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தார்.

    அப்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இவர் சிகிச்சைக்காக வேலூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கோமா நிலைக்கு சென்றது. இதனையடுத்து அவரை குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

    அவரது தாயார் கண்ணம்மாள் (70) அதே ஊரில் வசித்து வருகிறார். மகள் கோவிந்தம்மாள் இறந்த தகவலை கேள்விப்பட்டதும் கண்ணம்மாள் அதிர்ச்சியடைந்தார்.

    அந்த அதிர்ச்சியிலேயே அவரும் இறந்து விட்டார். இறந்த 2 பேரின் உடலும் நேற்று ஜோலார்பேட்டை அண்ணாநகர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். #Tamilnews
    ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. டிக்கெட் பரிசோதகராக கோவை போத்தனூரை சேர்ந்த அனீஷ் குமார் (25). என்பவர் பணியில் இருந்தார்.

    ரெயிலில் எஸ்8 முன்பதிவு பெட்டியில் சென்னையை சேர்ந்த குடும்பத்தினர் ஊட்டிக்கு சென்று விட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களில் 6 வயது சிறுமியும் இருந்தார். அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அதிகாலை 2 மணியளவில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது எஸ்.8 பெட்டிக்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அனிஷ்குமார் 6 வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மி‌ஷம் செய்தார். அப்போது திடீரென கண் விழித்த சிறுமியின் தந்தை இதை கண்டு திடுக்கிட்டார்.

    டிக்கெட் பரிசோதகர் அனீஷ் குமாரை அவர் கையும் களவுமாக பிடித்தார். சத்தம் கேட்டு ரெயலில் இருந்த மற்ற பயணிகளும் கண் விழித்தனர். சம்பவம் பற்றி அறிந்த அவர்கள் அனீஸ்குமாரை அடித்து உதைத்தனர். அதற்குள் ஜோலார்பேட்டைக்கு ரெயில் வந்தது.

    அனீஷ்குமாரை இழுத்து சென்ற பயணிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அனீஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ஜோலார்பேட்டை அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிக்னலுக்காக நின்றபோது பயணியிடம் 12 பவுன் நகை பையை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    கொல்லத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை அடுத்த கேத்தாண்டபட்டி சிக்னலுக்காக நின்றது. அதில் பயணம் செய்த செகந்திராபாத்தை சேர்ந்த ஜான்சன் (35), அவரது மனைவி ஜோதிமூன் (32) 12 பவுன் தங்க நகைகள், பணம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பையில் வைத்திருந்தனர். அந்த பையை தலையணையாக வைத்து தூங்கியபடி சென்றனர். சிக்னலில் நின்ற ரெயில் புறப்பட தயாரானது.

    அப்போது மர்ம நபர் ஒருவர் நகை பையை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டார். நகையை பறிகொடுத்த ஜான்சன் கூச்சலிட்டார். இதனால் ரெயிலில் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் மூலம் ஜோலார்பேட்டை போலீசாருக்கு அந்த பயணி புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×