என் மலர்
செய்திகள்

ரெயிலில் சென்னை சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம்- டிக்கெட் பரிசோதகர் கைது
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. டிக்கெட் பரிசோதகராக கோவை போத்தனூரை சேர்ந்த அனீஷ் குமார் (25). என்பவர் பணியில் இருந்தார்.
ரெயிலில் எஸ்8 முன்பதிவு பெட்டியில் சென்னையை சேர்ந்த குடும்பத்தினர் ஊட்டிக்கு சென்று விட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களில் 6 வயது சிறுமியும் இருந்தார். அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அதிகாலை 2 மணியளவில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது எஸ்.8 பெட்டிக்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அனிஷ்குமார் 6 வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்தார். அப்போது திடீரென கண் விழித்த சிறுமியின் தந்தை இதை கண்டு திடுக்கிட்டார்.
டிக்கெட் பரிசோதகர் அனீஷ் குமாரை அவர் கையும் களவுமாக பிடித்தார். சத்தம் கேட்டு ரெயலில் இருந்த மற்ற பயணிகளும் கண் விழித்தனர். சம்பவம் பற்றி அறிந்த அவர்கள் அனீஸ்குமாரை அடித்து உதைத்தனர். அதற்குள் ஜோலார்பேட்டைக்கு ரெயில் வந்தது.
அனீஷ்குமாரை இழுத்து சென்ற பயணிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அனீஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

Next Story