என் மலர்
நீங்கள் தேடியது "ticket inspector"
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று இரவு அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர் போதுங்கனி (வயது 59) பணியில் இருந்தார்.
- நுண்ணறிவு பிரிவு காவலர் வேல்முருகன் மின்னல் வேகத்தில் தப்பியோட முயன்ற செல்வக்குமாரை, மடக்கி பிடித்தார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் நிலையத்திற்கு சிவப்பு நிற பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர அங்கு ஏராளமான ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டு சவாரி ஏற்றி செல்கின்றனர். அங்கு பயணிகளை ஏற்றும்போது ஆட்டோ மற்றும் பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரான சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த போதுங்கனி(வயது 59) சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு தச்சநல்லூர் மேல அக்ரகாரம் தெருவை சேர்ந்த செல்வக்குமார்(30) என்பவர் வந்தார். ஆட்டோ டிரைவரான செல்வக்குமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதுங்கனியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து போதுங்கனியை குத்த முயன்றார்.
அப்போது அந்த வழியாக இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்திப்பு நுண்ணறிவு பிரிவு காவலர் வேல்முருகன் விரைந்து வந்து செல்வக்குமாரை பிடிக்க முயன்றார்.இதனால் அங்கிருந்து செல்வக்குமார் தப்பி ஓடினார்.
ஆனால் காவலர் வேல்முருகன் அவரை விடாமல் துரத்தி சென்றார். த.மு. சாலையில் மின்னல் வேகத்தில் தப்பியோட முயன்ற செல்வக்குமாரை, வேல்முருகன் மடக்கி பிடித்து சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்றார்.
கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. டிக்கெட் பரிசோதகராக கோவை போத்தனூரை சேர்ந்த அனீஷ் குமார் (25). என்பவர் பணியில் இருந்தார்.
ரெயிலில் எஸ்8 முன்பதிவு பெட்டியில் சென்னையை சேர்ந்த குடும்பத்தினர் ஊட்டிக்கு சென்று விட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களில் 6 வயது சிறுமியும் இருந்தார். அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அதிகாலை 2 மணியளவில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது எஸ்.8 பெட்டிக்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அனிஷ்குமார் 6 வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்தார். அப்போது திடீரென கண் விழித்த சிறுமியின் தந்தை இதை கண்டு திடுக்கிட்டார்.
டிக்கெட் பரிசோதகர் அனீஷ் குமாரை அவர் கையும் களவுமாக பிடித்தார். சத்தம் கேட்டு ரெயலில் இருந்த மற்ற பயணிகளும் கண் விழித்தனர். சம்பவம் பற்றி அறிந்த அவர்கள் அனீஸ்குமாரை அடித்து உதைத்தனர். அதற்குள் ஜோலார்பேட்டைக்கு ரெயில் வந்தது.
அனீஷ்குமாரை இழுத்து சென்ற பயணிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அனீஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews