search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் பஸ் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் குத்த முயன்ற டிரைவர்
    X

    நெல்லையில் பஸ் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் குத்த முயன்ற டிரைவர்

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று இரவு அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர் போதுங்கனி (வயது 59) பணியில் இருந்தார்.
    • நுண்ணறிவு பிரிவு காவலர் வேல்முருகன் மின்னல் வேகத்தில் தப்பியோட முயன்ற செல்வக்குமாரை, மடக்கி பிடித்தார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் நிலையத்திற்கு சிவப்பு நிற பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர அங்கு ஏராளமான ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டு சவாரி ஏற்றி செல்கின்றனர். அங்கு பயணிகளை ஏற்றும்போது ஆட்டோ மற்றும் பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரான சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த போதுங்கனி(வயது 59) சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணியில் இருந்தார்.

    அப்போது அங்கு தச்சநல்லூர் மேல அக்ரகாரம் தெருவை சேர்ந்த செல்வக்குமார்(30) என்பவர் வந்தார். ஆட்டோ டிரைவரான செல்வக்குமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதுங்கனியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து போதுங்கனியை குத்த முயன்றார்.

    அப்போது அந்த வழியாக இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்திப்பு நுண்ணறிவு பிரிவு காவலர் வேல்முருகன் விரைந்து வந்து செல்வக்குமாரை பிடிக்க முயன்றார்.இதனால் அங்கிருந்து செல்வக்குமார் தப்பி ஓடினார்.

    ஆனால் காவலர் வேல்முருகன் அவரை விடாமல் துரத்தி சென்றார். த.மு. சாலையில் மின்னல் வேகத்தில் தப்பியோட முயன்ற செல்வக்குமாரை, வேல்முருகன் மடக்கி பிடித்து சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்றார்.

    Next Story
    ×