search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜே.சி.பி."

    • வீட்டை சுற்றி குளத்து நீர் சூழ்ந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
    • மழைநீர் வெளியேற்றப்பட்டு மழைநீரால் சூழப்பட்ட வீட்டினுள் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

    கருங்கல் :

    கீழ்குளம் அருகே குஞ்சாகோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக அரையாக்குழி விளை புளியடி குளம், பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் வேணு என்பவர் வீடு மதில் சுவர் மற்றும் வீட்டின் தலைவாசல் படிக்கட்டு வரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. வீட்டை சுற்றி குளத்து நீர் சூழ்ந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜே.சி.பி.யை வரவழைத்து குளத்தில் இருந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து மழைநீர் வெளியேற்றப்பட்டு மழைநீரால் சூழப்பட்ட வீட்டினுள் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் அந்த வீடும் பாதுகாக்கப்பட்டது.

    அப்போது கிள்ளியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால், பேரூராட்சி செயல் அலுவலர் ரெகுநாதன், பேரூராட்சி உறுப்பினர் ஜாஸ்மின், லிபின்தாஸ், விக்னேஷ், ஜோஸ், அபிலாஷ், கிறிஸ்டோபர், சிங் உட்பட பலர் உடனிருந்தனர். இவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • சுரேஷ்குமார் தனக்கு சொந்தமான ஜே.சி.பி.யை அப்பகுதியில் நிறுத்தி இருந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    நெல்லை:

    பெருமாள்புரம் அருகே உள்ள ஆயன்குளம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஜே.சி.பி.யை அப்பகுதியில் நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்த போது, ஜே.சி.பி.யின் பேட்டரி திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் பேட்டரியை திருடியது ரெட்டி யார்பட்டி யை சேர்ந்த ஜெகன் (30) மற்றும் மகி ழ்ச்சி நகரை சேர்ந்த சந்தோஷ் குமார் (30) என்பது தெரியவந்தது. இதைத் தொ டர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஜே.சி.பி.எந்திரம் மோதி 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. டிரைவரான அ.கொக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருள்தாஸ்புரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவரது மகன் அஜித் (வயது 17). சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் மாசாணம் (20), ராஜ்குமார் (21) ஆகியோரும் அவருடன் சென்றனர்.

    ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் செக்கானூரணி-விக்ரமங்கலம் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த ஜே.சி.பி. எந்திரம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஜித், மாசாணம், ராஜ்குமார் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. டிரைவரான அ.கொக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ேவலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • பலத்த காயமடைந்த மதன்ராஜ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் ஜே.சி.பி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் மதன்ராஜ் (வயது 20). இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மதன்ராஜ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மதன்ராஜ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில்வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×