search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JCB"

    • ஜே.சி.பி. வாகனம் எரிந்து சேதம்
    • கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அடைக்கலபுரத்தைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 39). ஜே.சி.பி. வாகனத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கலிங்கப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் இவரது ஜே.சி.பி. வாகனத்தின் ஆப்பரேட்டராக உள்ளார். சம்பவத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள மூக்கரநத்தம் பகுதியில் உள்ள செந்தட்டிக் காளை என்பவருக்கு சொந்தமான வயல் காட்டில் ஜே.சி.பி. உதவியுடன் முள் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் கருப்பசாமி ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு மேட்டில் சென்றபோது ஜே.சி.பி. வாகனம் பழுதாகி நின்று விட்டது. இதையடுத்து மெக்கானிக்கை அழைத்து வருவதற்காக கருப்பசாமி சென்றார்.

    அப்போது அருகே உள்ள சோளக்காட்டில் வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தில் தீ பரவி ஜே.சி.பி. வாகனத்தில் தீப்பிடித்தது. அந்த வழியாக வந்தவர்கள் அதனைப் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் மற்றும் வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து இரண்டு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ஜே.சி.பி. வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஜே.சி.பி. வாகனம் முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து மாரிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஜே.சி.பி.எந்திரம் மோதி 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. டிரைவரான அ.கொக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருள்தாஸ்புரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவரது மகன் அஜித் (வயது 17). சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் மாசாணம் (20), ராஜ்குமார் (21) ஆகியோரும் அவருடன் சென்றனர்.

    ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் செக்கானூரணி-விக்ரமங்கலம் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த ஜே.சி.பி. எந்திரம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஜித், மாசாணம், ராஜ்குமார் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. டிரைவரான அ.கொக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×