ஜே.சி.பி.எந்திரம் மோதி படுகாயம்

ஜே.சி.பி.எந்திரம் மோதி 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. டிரைவரான அ.கொக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜே.சி.பி.எந்திரம் மோதி படுகாயம்
Published on

மதுரை

மதுரை அருள்தாஸ்புரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவரது மகன் அஜித் (வயது 17). சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் மாசாணம் (20), ராஜ்குமார் (21) ஆகியோரும் அவருடன் சென்றனர்.

ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் செக்கானூரணி-விக்ரமங்கலம் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த ஜே.சி.பி. எந்திரம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஜித், மாசாணம், ராஜ்குமார் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. டிரைவரான அ.கொக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com