மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

ேவலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பலத்த காயமடைந்த மதன்ராஜ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Published on

நீடாமங்கலம்:

வலங்கைமானில் ஜே.சி.பி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் மதன்ராஜ் (வயது 20). இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மதன்ராஜ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மதன்ராஜ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில்வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com