search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜக்தீப் தன்கர்"

    • மகாத்தா காந்தி கடந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்.
    • பிரதமர் மோடி இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்.

    துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசும்போது மகாத்மா காந்தி- பிரதமர் மோடி ஆகியோரை ஒப்பிட்டு கூறினார்.

    துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசும்போது "மகாத்மா காந்தி கடந்த நூற்றாண்டின் மாமனிதர். பிரதமர் மோடி இந்த நூற்றாண்டில் சிறந்த மனிதர்.

    உண்மை மற்றும் வன்முறையைற்ற வழியில் ஆங்கிலேயர் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தார். பிரதமர் மோடி நாம் பார்க்க விரும்பிய வளர்ச்சியில் நாட்டை கொண்டு வந்துள்ளார்." என்றார்.

     இதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கம் பதிவில் "மகாத்மா காந்தியுடன் நீங்கள் ஒப்பீடு செய்தது வெட்கக்கேடானது சார். ஒருவரை உயர்த்தி பேசுவதற்கு ஒரு எல்லை உண்டு என்று நாம் எல்லோருக்கும் தெரியும். தற்போது அந்த எல்லையை நீங்கள் மீறிவிட்டீர்கள். உங்களது பதவி மற்றும் நிலைக்கு இப்படி துதி பாடுவது மதிப்பை சேர்க்காது" எனத் தெரிவித்துள்ளார்.

     ஜக்தீப் தன்கர் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளுநராக இருந்தார். அப்போது அதிகாரம் யாருக்கு என்பதில் மம்தா பானர்ஜிக்கும்- இவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா அனைத்து மட்டத்திலும் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக உள்ளது.
    • நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் சந்தர்ப்பம்.

    குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை நாம் இன்று கொண்டாடும் போது, நமது சுதந்திரம் எவ்வளவு கடினமாகப் போராடி கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

    ஒடுக்குமுறையான காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுத்தந்த தியாகமும், வீரமும் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் சுதந்திர தினம்.

    இந்த நாள் நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, நிலையான மற்றும் வலுவான குடியரசின் அடித்தளத்தை அமைத்தது.  இன்று இந்தியா அனைத்து மட்டத்திலும் வளர்ச்சியின் பாதையில் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக உள்ளது.

    விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேசபக்தி, தியாகம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை இளைய தலைமுறையினருக்கு ஊக்குவிப்பதற்கு, நமது மாபெரும் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளை நினைவு கூர்ந்து மீண்டும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது.

    இந்த சுதந்திர தினத்தன்று, அரசியலமைப்பு விழுமியங்களின் நாகரீக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பித்து, அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மற்றும் வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×