search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை ஓட்டம்"

    • நெல்லையில் இருந்து புறப்பட்ட அந்த என்ஜின் 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.
    • பேட்டையில் மின் கட்டுப்பாட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி இடையே 72 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது போக்கு வரத்துக்கு தயாராக உள்ளது.

    இதற்கு முன்னோட்டமாக அந்த பாதையில் மின்சார ரெயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட அந்த என்ஜின் நெல்லையில் இருந்து புறப்பட்டு தென்காசி வரை சென்று மீண்டும் நெல்லைக்கு வந்தது. அந்த என்ஜின் பாவூர் சத்திரம் ரெயில் நிலையத்தில் நெல்லை -செங்கோட்டை ரெயில் கிராசிங்கிற்காக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது பயணிகள் அதை ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

    இந்த நிலையில் நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடை யம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி வரையிலான பாதையை தென்னக ரெயில்வே முதன்மை தலைமை மின்மயமாக்கல் என்ஜினீயர் உட்பட அதிகாரிகள் நாளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    இந்த ஆய்வானது நாளை (திங்கட்கிழமை) நெல்லையில் இருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும்.பின்னர் தென்காசியில் இருந்து நெல்லைக்கு மின்சார ரெயில் சோதனை நடத்தப் படும். இந்த பணிகள் மாலை 4.30 மணியுடன் நெல்லை ரெயில் நிலையத்தில் முடி வடையும்படி திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார ரெயில் இயக்குவதற்கு வசதியாக வீரவ நல்லூர் ரெயில்வே சார்பில் துணை மின் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் மற்றும் பேட்டை யில் மின் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம், ஆழ்வார் குறிச்சி ஆகிய இடங்களில் துணை பிரிவு மின் நிலை யங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    விருதுநகர் - தென்காசி இடையே 122 கிலோமீட்டர் தூரத்துக்கும், தென்காசி - பகவதிபுரம் இடையே 14 கிலோமீட்டர் தூரத்துக்கும் இந்த மாத இறுதிக்குள் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைய உள்ளது குறிப் பிடத்தக்கது.

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோ மீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்து இருந்தது.
    • நெல்லையில் இருந்து இன்று காலை 10.20 மணிக்கு அதிவேக ரெயிலானது புறப்பட்டு தென்காசி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.

    நெல்லை:

    சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு தென்மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.

    தென்னக ரெயில்வேயில் அதிக அளவு வருவாயை கொடுக்கும் வழித்தடங்கள் கொண்டதாக இந்த வழித்தடம் உள்ளது. ஆனால் சிக்னல்களுக்காக பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ரெயில்கள் மணிக்கணக்கில் காத்து நின்று செல்வதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

    இதன் காரணமாக நெல்லை-தென்காசி, திருச்செந்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளுடன், பாதைகள் பலப்படுத்தப்பட்டு வேகம் அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் குறிப்பாக 64 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடம் 2012-ல் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே அந்த பாதையில் ரெயில்கள் இயங்கி வருகிறது.

    அதன் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோ மீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்து இருந்தது.

    அதன்படி நெல்லையில் இருந்து இன்று காலை 10.20 மணிக்கு அதிவேக ரெயிலானது புறப்பட்டு தென்காசி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.

    மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து புறப்பட இருந்த இந்த ரெயில் சோதனை ரத்து செய்யப்பட்டது. அதிவேக சோதனை ஓட்டத்திற்கு பிறகு நெல்லை-தென்காசி வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டால் அந்த வழியாக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் பயண நேரம் குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன
    • விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப் பட்டு வருகிறது.

    கோவை,

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஓடுதள பராம ரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வரும் காரணத்தால் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் விமான சேவை வழங்கப்படுகிறது.

    உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப் பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் கோவை யில் இருந்து ஐதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு பிரத்யேக சரக்கு விமான சேவை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல பன்னாட்டு தொழில் நிறுவனம் சமீபத்தில் பிரத்யேக சரக்கு விமான போக்குவரத்தை இந்தியாவில் தொடங்கி உள்ளது. டெல்லி, பெங்க ளூர், ஐதராபாத், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பிரத்யேக சரக்கு விமான சேவையை தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளது.

    இதன் முன்னோட்டமாக கோவையில் கடந்த மாத இறுதியில் கோவை - ஐதராபாத், கோவை - பெங்களூர் நகரங்களுக்கு இடையே சரக்கு விமான சேவை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக செலவாகும் எரிபொருளின் அளவு, சரக்குகள் கையாளும் திறன், நேர மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.

    கோவையில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல இரு பன்னாட்டு நிறு வனங்களின் பொருட்கள் சேமிப்பு குடோன்கள் செயல்படுகின்றன.

    சாலை வழியாக பொருட்களை கொண்டு வருவதில் ஏற்படும் காலதாமதத்தை சரக்கு விமான சேவை குறைக்கும்.

    சோதனை ஓட்டம் முடிந்துள்ள நிலையில் சரக்கு விமான சேவையை கோவையில் தொடர்ந்து செயல்படுத்த அந்த நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 160 பயணிகளுடன் இயக்கி வெற்றி.
    • சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன.

    ஊட்டி,

    நீலகிரி மலை ரயிலில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகை மற்றும் கரித்துகள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்களால் தீ விபத்துகள் நேரிடாமல் தடுக்கும் வகையிலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவும் குன்னூா் ெரயில்வே பணிமனையில் தலைமை மெக்கானிக் மாணிக்கம் தலைமையிலான குழு, டீசலை எரிபொருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் 2-வது என்ஜினை குன்னூரில் வடிவமைத்திருந்தது.

    அந்த என்ஜின் முதல்முறையாக 160 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் ெரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கரத் தண்டவாள அமைப்புடனும், யுனெஸ்கோ அமைப்பு சாா்பில் உலகப் பாரம்பரிய அந்தஸ்துடனும் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில்.

    ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் சுவிட்சா்லாந்தில் வடிவமைக்கப்பட்டு நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த மலை ெரயில் என்ஜின்கள், மேட்டுப்பாளையம் முதல் குன்னூா் வரை நீராவி மூலம் மட்டுமே வரை இயக்கப்பட்டு வந்தது. நிலக்கரியை எரிபொருளாக கொண்டு பல ஆண்டுகளாக மலை ெரயிலை இயக்கி வந்தனா். நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அதிலிருந்து வெளியேறும் புகையின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாலும், கரித்துக ள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்கள் வனப் பகுதிகளில் தீ விபத்துகளை ஏற்படுத்தும் சூழல் உள்ளதாலும், பா்னஸ் ஆயிலை எரிபொ ருளாக கொண்டு இயங்கும் வகையில் என்ஜினில் மாற்றம் செய்யப் பட்டது.

    பின்னா் காற்று மாசைக் குறைக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் டீசலை எரிபொ ருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் வகையில் முதல் மலை ெரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ெரயில்வே பணிம னையில் வடிவமை க்கப்பட்டது.

    இது வெற்றி பெற்றதைத் தொடா்ந்து இரண்டா வதாக டீசலை எரிபொ ருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் என்ஜின் தயாரிக்கப் பட்டு சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன. 

    • திண்டுக்கல்-பழனி மின் பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
    • மதுரை கூடுதல் கோட்ட ெரயில்வே மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    திண்டுக்கல்-பழனி இடையே 58 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் முடிந்து விட்டன.

    இந்த ரெயில் பாதையில் இன்று (13-ந் தேதி) முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த் ஆய்வு செய்தார். அவருடன் முதன்மை மின்மயமாக்கல் இயக்குனர் சமீர் டிஹே, முதன்மை சைகை பொறியாளர் சுனில், முதன்மை மின் பகிர்மான பொறியாளர் சுரேந்திரன், மதுரை கூடுதல் கோட்ட ெரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டுக்கல்-பழனி இடையே சிறப்பு ரெயில் மூலம் ஆய்வு நடந்தது. இதனைத்தொடர்ந்து சிறப்பு ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடந்தது.

    • தொடர் மழை காரணங்களால் சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதம் அடைந்ததின் காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
    • மீண்டும் வரும் 13-ந் தேதி பேருந்து வசதி தொடங்கி வைக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டத்தில் குளிர்ச்சியான பகுதியாகவும் ஏழைகளுக்கு மினி ஊட்டியாகவும் திகழும் வகையில் வத்தல் மலை அமைந்துள்ளது.

    வத்தல் மலையில் காப்பி, மிளகு, நெல், ராகி, கடுகு, சாமை, வரகு மற்றும் பலாப்பழம் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதி பொதுமக்கள் பெருமளவு விவசாயத்தை நம்பி இருப்பதால் விளைகின்ற பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், மேலும் பள்ளி, மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கும் வத்தல் மலைப்பகுதியில் இருந்து 8 கிலோமீட்டர் தாண்டி அடிவாரப் பகுதிக்கு வந்து தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி பகுதிகளை சென்றடைய வேண்டிய சூழல் உள்ளது.

    இந்த மலைப்பகுதிக்கு ஏற்கனவே சாலை அமைக்கப்பட்டு பேருந்தும் இயக்கப்பட்டது. தொடர் மழை காரணங்களால் சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதம் அடைந்ததின் காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    அதனைத் தொடர்ந்து மீண்டும் தார் சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கபட்டு பழுதடைந்த பாலங்கள் சாலை சீரமைக்கப்பட்டு பேருந்து சேவைக்காக சாலை முழு வீச்சில் தயார் செய்யப்பட்டது. இருப்பினும் பேருந்து சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

    அதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் தொடர்ந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

    ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழாவிற்கு வந்திருந்த வேளாண் மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் வத்தல் மலைக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    அதன்படி வரும் 13-ந் தேதி பேருந்து வசதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. நேற்று வத்தல் மலைப்பகுதிக்கு கொண்டை ஊசி வளைவுகள் வழியாக பேருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    இதனால் பால்சிலம்பு, பெரியூர், சின்னாங்காடு, ஒன்றியங்காடு, நாயக்கனூர், வத்தல்மலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ரோப்கார் செயல்பாட்டில் மாதம் தோறும் ஒரு நாள் மற்றும் வருடத்துக்கு ஒரு மாதம் மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பூஜைகள் செய்யப்பட்டு ரோப் கார் பெட்டியில் எடை கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் சிரமம் இன்றி செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் செல்வதையே பெரிதும் விரும்புவார்கள். குறைந்த நேரத்தில் மலைக்கோவிலை சென்றடையலாம் என்பதாலும், இயற்கை காட்சிகளை ரசிக்கலாம் என்பதாலும் இதற்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

    ரோப்கார் உறுதி தன்மையை அறிந்து கொள்வதற்காகவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மாதம் தோறும் ஒரு நாள் மற்றும் வருடத்துக்கு ஒரு மாதம் மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணிகள் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தொடங்கியது. அப்போது ரோப் காரில் இருந்த பழுதான பாகங்கள் அகற்றப்பட்டு புதிய பாகங்கள் பொருத்தப்பட்டது. குறிப்பாக கொல்கத்தாவிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சாப்ட் வரவழைக்கப்பட்டு ரோப் காரில் பொருத்தப்பட்டது.

    மற்ற பராமரிப்பு பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ரோப் கார் பெட்டிகளுக்கு புதிய வண்ணம் பூசப்பட்டு பொறியாளர்கள் அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்தனர்.

    பணிகள் நிறைவடைந்தது தெரிய வரவே இன்று காலை சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரோப் கார் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரோப் கார் பெட்டியில் எடை கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ஓட்டம் திருப்தியளிக்கும் பட்சத்தில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு ஓரிரு நாளில் தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×