search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani ropecar test"

    • ரோப்கார் செயல்பாட்டில் மாதம் தோறும் ஒரு நாள் மற்றும் வருடத்துக்கு ஒரு மாதம் மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பூஜைகள் செய்யப்பட்டு ரோப் கார் பெட்டியில் எடை கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் சிரமம் இன்றி செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் செல்வதையே பெரிதும் விரும்புவார்கள். குறைந்த நேரத்தில் மலைக்கோவிலை சென்றடையலாம் என்பதாலும், இயற்கை காட்சிகளை ரசிக்கலாம் என்பதாலும் இதற்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

    ரோப்கார் உறுதி தன்மையை அறிந்து கொள்வதற்காகவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மாதம் தோறும் ஒரு நாள் மற்றும் வருடத்துக்கு ஒரு மாதம் மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணிகள் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தொடங்கியது. அப்போது ரோப் காரில் இருந்த பழுதான பாகங்கள் அகற்றப்பட்டு புதிய பாகங்கள் பொருத்தப்பட்டது. குறிப்பாக கொல்கத்தாவிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சாப்ட் வரவழைக்கப்பட்டு ரோப் காரில் பொருத்தப்பட்டது.

    மற்ற பராமரிப்பு பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ரோப் கார் பெட்டிகளுக்கு புதிய வண்ணம் பூசப்பட்டு பொறியாளர்கள் அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்தனர்.

    பணிகள் நிறைவடைந்தது தெரிய வரவே இன்று காலை சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரோப் கார் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரோப் கார் பெட்டியில் எடை கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ஓட்டம் திருப்தியளிக்கும் பட்சத்தில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு ஓரிரு நாளில் தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×