search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட்"

    • செஸ் ஒலிம்பியாட் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கம் வென்றனர்.
    • தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கம் வென்றார்.

    சென்னை:

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.

    இறுதி நாளான இன்று இந்திய அணி 2 வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாடில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

    இந்நிலையில், ஆடவர் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹல் சரின், எரிகேசி அர்ஜுன் ஆகியோர் விளையாடினர்.

    இதில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும், எரிகேசி அர்ஜுன் வெள்ளி வென்றார். பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.

    தனிநபர் பிரிவில் வைஷாலி, தானியா சச் தேவ், திவ்யா தேஷ்முக் ஆக்யோரும் வெண்கலம் வென்று அசத்தினர்.

    • மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
    • மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது.

    சென்னை:

    86 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

    மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது. இன்று இந்திய ஏ அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்த நிலையில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

    ஆடவர் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

    • 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் ‘பி’ அணி ஜெர்மனியை எதிர் கொண்டது.
    • கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை இந்தியா தட்டிச் சென்றது.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் 'பி' அணி ஜெர்மனியை எதிர் கொண்டது.

    இந்த போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை இந்தியா தட்டிச் சென்றது. 

    ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி 19 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. அர்மீனியா அணி 19 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

    • திவ்யா தேஷ்முக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்லோவாகியா நாட்டு வீராங்கனையை 33-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
    • இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய பிரத்யுஷா போடா வெற்றி பெற்றார்.

    சென்னை:

    186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11 ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் இந்திய மகளிர் பி அணியில் விளையாடிய திவ்யா தேஷ்முக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்லோவாகியா நாட்டு வீராங்கனையை 33-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    அதைபோல இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய பிரத்யுஷா போடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட கஜகஸ்தான் வீராங்கனையை 41-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

    • மகளிர் பிரிவில் 21 பேருக்கு பீடே மாஸ்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
    • ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களை சேர்ந்த வீரர்கள் இதற்கு தகுதி பெற்று உள்ளனர்.

    சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 17 பேருக்கு பீடே (சர்வதேச செஸ் கூட்டமைப்பு) மாஸ்டர் பட்டம் வழங்கப்படுகின்றன. உடனடியாக இந்த பட்டங்களை பெற ஒருவர் குறிப்பிட்ட காலத்துக்குள் ரேட்டிங் புள்ளிகள் 2,100-யை பெற்று இருக்க வேண்டும். போட்டி முடிவில் மேலும் சில வீரர்கள் பீடே மாஸ்டர் பட்டம் பெற வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே இந்திய வீரர்கள் இந்த பட்டங்களை பெற்று விட்டனர். ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களை சேர்ந்த வீரர்கள் இதற்கு தகுதி பெற்று உள்ளனர்.

    மகளிர் பிரிவில் 21 பேருக்கு பீடே மாஸ்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பட்டங்களை பெற குறைந்தது 1900 ரேட்டிங் புள்ளிகள் பெற்று இருக்க வேண்டும்.

    • இந்திய ‘பி’, இந்திய ‘ஏ’, அமெரிக்கா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன.
    • இந்திய ‘பி’ அணி சுலோவாக்கியாவையும், இந்திய ‘சி’ அணி கஜகஸ்தானையும் சந்திக்கின்றன.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் ரவுண்டு கடந்த 29-ந் தேதி தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இதன் ஓபன் பிரிவில் 186 அணிகளும், மகளிர் பிரிவில் 166 அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இதன் 10-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. ஓபன் பிரிவில் இந்தியா பி-உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது. இந்திய சி அணி-சுலோவாக்கியா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.

    ஓபன் பிரிவில் உஸ் பெகிஸ்தான், அர்மெனியா தலா 17 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. டைபிரேக்கர் அடிப்படையில் உஸ்பெகிஸ் தான் முதல் இடத்திலும், அர்மெனியா 2-வது இடத்திலும் இருக்கிறது.

    இந்திய 'பி', இந்திய 'ஏ', அமெரிக்கா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. டை பிரேக்கர் அடிப்படையில் இந்திய 'பி' அணி 3-வது இடத்திலும், இந்திய 'ஏ' அணி 4-வது இடத்திலும், அமெரிக்கா 5-வது இடத்திலும் உள்ளன. இந்திய 'சி' அணி 28-வது இடத்தில் இருக்கிறது.

    இன்று நடைபெறும் 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய 'பி' ஜெர்மனியை எதிர் கொள்கிறது. இந்திய 'ஏ' அணி அமெரிக்காவுடனும், இந்திய 'சி' அணி கஜகஸ்தானுடனும் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 3.5-0.5 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் நெதர்லாந்தையும், இந்திய 'சி' அணி 3-1 என்ற கணக்கில் சுவீடனையும் தோற்கடித்தது.

    மகளிர் பிரிவில் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா, பக்தி குல்கானி ஆகியோரை கொண்ட இந்திய 'ஏ' அணி 17 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி தங்கப் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தங்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    போலந்து, அசர்பெய்டான், உக்ரைன் ஜார்ஜியா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. டை பிரேக்கர் அடிப்படையில் போலந்து 2-வது இடத்திலும், அசர் பெய் ஜான் 3-வது இடத்திலும், உக்ரைன் 4-வது இடத்திலும், ஜார்ஜியா 5-வது இடத்திலும் உள்ளன.

    இந்திய 'ஏ' அணி கடைசி சுற்றில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்திய 'பி' அணி சுலோவாக்கியாவையும், இந்திய 'சி' அணி கஜகஸ்தானையும் சந்திக்கின்றன.

    முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்படும். இதனால் இன்றைய கடைசி சுற்று மிகவும் முக்கியத்துவம் பெற்றது.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்று போட்டி நடைபெற்றது.
    • இதில் பிரக்ஞானந்தா 76-வது காய் நகர்த்தலில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தினார்.

    சென்னை:

    186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது.

    10-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா 2 அணியில் உள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தான் வீரர் சிந்தரோவ் ஜாவோகிருடன் மோதினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 77-வது நகர்த்தலில் சிந்தரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் கடைசி சுற்று நாளை நடக்கிறது.
    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடக்கிறது.

    சென்னை:

    186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் நேற்று வரை 9 சுற்றுகள் முடிவடைந்துள்ளது.

    10-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஒபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் தலா மூன்று அணிகள் விளையாடி வருகின்றன.

    ஒபன் பிரிவில் இந்திய 'பி' அணி 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் 10-வது சுற்றில் இந்திய 'பி' அணி முதலிடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானுடன் மோதுகிறது.

    இந்திய 'பி' அணியில் டி.குகேஷ், பிரக்ஞானந்தா, சரின் நிஹல், சத்வானி ரானக், அதிபன் ஆகியோர் உள்ளனர். இந்திய 'ஏ' அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தை அமெரிக்கா, அஜர்பைஜான் உள்பட 7 அணிகளுடன் பகிர்ந்துள்ளது.

    இந்திய 'சி' அணி 12 புள்ளிகளுடன் 22-வது இடத்தில் உள்ளது. 10-வது சுற்றில் இந்திய 'சி' அணி ஸ்லோவாக்கியாவுடன் மோதுகிறது.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தை போலந்து, கஜகஸ்தான், ஜார்ஜியா ஆகிய அணிகளுடன் பகிர்ந்துள்ளது. நேற்று நடந்த 9-வது சுற்றில் போலந்திடம் இந்திய 'ஏ' அணி தோல்வி அடைந்தது. அந்த அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இந்திய 'ஏ' அணி இன்று 10-வது சுற்றில் கஜகஸ்தானுடன் மோதுகிறது.

    சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய 'ஏ' அணி மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். இதனால் வெற்றி கட்டாயத்துடன் இன்று களம் காணுகிறது. அந்த அணியில் கோனேருஹம், ஹரிகா, தானியா சச்தேவ், வைஷாலி, குல்கர்னி பாக்தி ஆகியோர் உள்ளனர்.

    இந்திய 'பி' மற்றும் 'சி' அணிகள் தலா 13 புள்ளிகள் பெற்று 7 அணிகளுடன் 10-வது இடத்தை பகிர்ந்து உள்ளன. 10-வது சுற்றில் இந்திய 'சி' அணி சுவீடனுடன் மோதுகிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் கடைசி சுற்று நாளை நடக்கிறது. காலை 10 மணிக்கு கடைசி சுற்று தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    • 66-வது காய் நகர்த்தலில் அஜர்பைஜான் வீரரை வீழ்த்தினார்.
    • கிராண்ட் மாஸ்டரானார் தமிழக இளம் செஸ் வீரர் வி.பிரணவ்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியது. நேற்று நடைபெற்ற 9-வது சுற்று ஆட்ட ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் வீரர் துரார்பெய்லி வாசிப்புடன் மோதினார். பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலின் முடிவில் வாசிப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார். 


    இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் வி.பிரணவ். ருமேனியாவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றதும் மூலம் கிராண்ட்மாஸ்டர் தரநிலையை வெற்றிகரமாக அடைந்துள்ளார். இதையடுத்து அவர் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டரானார். தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய 27-வது வீரர் பிரணவ் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி, முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை வென்றது.
    • இந்திய அணியின் இளம் வீரர் குகேஷ் 8வது சுற்றிலும் வெற்றி பெற்று அசத்தினார்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ஓபன் பிரிவில் இந்திய பி அணி, நேற்று நடந்த 7வது சுற்று ஆட்டத்தில் கியூபா அணியை வென்றது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி, முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய பி அணி, 3-1 என வெற்றி பெற்று அசத்தியது. இந்திய அணியின் இளம் வீரர் குகேஷ் பேபியானோ கரானாவை வீழ்த்தினார். இதன்மூலம் குகேஷ் 8 சுற்றுகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ரவுனக் சத்வானி, லீனியர் டொமிங்குவேசை வென்றார். 

    • நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்திய ஏ அணி விளையாட உள்ளது.
    • இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    இன்று நடந்த 6வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'சி' அணியை இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன்பின்னர் 7வது சுற்றில் அசர்பைஜான் அணியுடன் விளையாடியது. இப்போட்டியிலும் இந்திய ஏ அணி வெற்றி வாகை சூடியது.

    இந்தியா ஏ அணியின் முக்கிய வீராங்கனையான ஹம்பி கோனேரு தோல்வியடைந்தார். ஆனால், வைஷாலி மற்றும் டானியா சச்தேவ் ஆகியோர் வெற்றி பெற்றதால், 2.5-1.5 என்ற கணக்கில் அணி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்து உக்ரைன், அர்மீனியா, ஜார்ஜியா தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது.

    இதேபோல் இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இது இந்திய பி அணிக்கு 6வது வெற்றியாகும்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி 11 சுற்றுகளாக சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது.
    • இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி வெற்றி பெற்றுள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    இந்திய 'பி' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து அசத்தி வருகிறார். 6 சுற்றுகளில் விளையாடிய அவர், 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றார். இன்று நடந்த 7வது போட்டியிலும் வெற்றி வாகை சூடினார். இன்றைய போட்டியில், கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை 46 வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

    ×