search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவ்தாஸ் மீனா"

    • பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் சாமன்னா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்தார்.

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.100.7 கோடி மதிப்பில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    அப்போது பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் 4ஆம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.1,100 கோடி திட்ட மதிப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று நிலையம் அருகே பவானி ஆற்றங்கரையில் இத்திட்டம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் சாமன்னா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து திருப்பூர் குடிநீர் திட்டம் கோவை தொண்டாமுத்தூர் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேற்கண்ட பணிகளையும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அங்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மண்டல இயக்குநர் இளங்கோவன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் அமுதா, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    • மண்டலம்-2 நெடுஞ்செழியன் சாலையில் வாரியத்தின் மீதமுள்ள 100 மீட்டர் பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
    • அனைத்து பஸ் தட சாலைகளிலும் சாலை வெட்டுகளை சீரமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்து, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் சேவைத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க மண்டல வாரியாக குறுகிய கால ஒப்பந்தம் மூலம் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் சாலை வெட்டுக்கள் முடிக்கப்பட உள்ள இடங்களில் சீரமைக்கப்படவுள்ள 140 சாலைகளிலும் மற்றும் சாலை வெட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 277 சாலைகளிலும் அக்டோபர் 10-ந்தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும்; இதுதவிர வேறு எந்த சாலை வெட்டுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

    மேலும், கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில், சேவைத் துறையினரால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதை சிறந்த முறையில் சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மண்டலம்-2 நெடுஞ்செழியன் சாலையில் வாரியத்தின் மீதமுள்ள 100 மீட்டர் பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்; அனைத்து பஸ் தட சாலைகளிலும் சாலை வெட்டுகளை சீரமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.

    வடகிழக்கு பருவமழை முடியும் காலம் வரை புதிய சாலை வெட்டுகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்; சாலை சீர் அமைக்கும் பணிக்கு கொண்டுவரும் வாகனங்களுக்கு பகல் நேரங்களில் போக்குவரத்து துறையில் அனுமதி அளிக்க வேண்டும்; எருக்கஞ்சேரி சாலையில் மூலக்கடை சந்திப்பு முதல் மாதவரம் ரவுண்டானா வரை மேற்கொள்ளப்படும் சாலை பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.

    மேலும், முகலிவாக்கம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அவை முடிக்கப்பட்ட இடங்களில் சாலை பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்; ஆற்காடு சாலை, ஓஎம்ஆர் சாலை சீரமைக்கும் பணிகள், கொட்டிவாக்கம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.

    நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர், 100 அடி உள்வட்ட சாலையில் மேற்கொண்ட சாலைவெட்டு பணிகள் முடிவடைந்ததாகவும், சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை 30-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
    • நடவடிக்கைகள் அனைத்தையும் வருகிற 30-ந்தேதிக்கு முன் நிறைவேற்றி முடிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 60 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய்களை அமைத்து, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டது என மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இத்தகைய வகையில் சிறந்து விளங்கிய நம் மாநிலத்தில், மாசுபாடான நீரை அருந்தியதால் பலர் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற செய்திகள் வருவது வருந்தத்தக்கது.

    எனவே, இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, குடிநீர் வினியோகம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

    குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் வருகிற 30-ந்தேதிக்கு முன் நிறைவேற்றி முடிக்க வேண்டும்.

    மேலும், இதுதொடர்பான முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான விளைவுகளையும் கண்காணிக்க ஏதுவாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.
    • கடந்த சில நாட்களாக புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார்.

    நகராட்சி நிர்வாகம்-நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தற்போது தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.

    கடந்த சில நாட்களாக புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    • சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராகலாம் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வருகிற 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதே நாளில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் ஓய்வு பெறுகிறார்.

    இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? புதிய டி.ஜி.பி. யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    ஆனாலும் இந்த பட்டியலில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயர்கள் உள்ளதால் அதில் ஒருவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து அறிவிப்பார்.

    அதே போல் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    அதாவது தற்போதைய தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் 1986-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவராக உள்ளார்.

    அடுத்தது, 1989ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

    மூன்றாவது, இதே 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

    இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனாவே தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராகலாம் என தெரிகிறது.

    ×