search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiv Das Meena"

    • வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அதிகனமழை பெய்தது.

    வரலாறு காணாத வகையில் பெய்த இந்த மழையால், வழக்கமாக மழை வெள்ளத்தால் பாதிக்காத வறட்சியான பகுதியில் கூட வெள்ளம் சூழ்ந்தது.

    கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் அந்த தண்ணீர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி என பல்வேறு இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    வெள்ளம் படிப்படியாக குறைந்ததையடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இதனால் விமானம், ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட திருச்செந்தூர் உள்ளிட்ட சில இடங்களுக்கும் தற்போது போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

    புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி இருந்தாலும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இன்று 7-வது நாளாகவும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை வெளியேற்றும் பணி இரவு, பகலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ளம் பாதித்த மறவன்மடம், குறிஞ்சி நகர், 3-ம் கேட் பகுதி, அந்தோணியார்புரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

    தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

    குறிஞ்சி நகரில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பக்கிள் ஓடை மூலமாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேங்கிய வெள்ள நீர் பம்பிங் செய்யப்பட்டும் வெளியேற்றப்படுகிறது. அதற்கு தேவையான கூடுதல் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.


    குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைந்துள்ள சாலையில் தேங்கிய வெள்ளத்தில் நடந்து சென்று ஆய்வு செய்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.


    ரெயில்வே கேட் பகுதிக்குள் கூடுதல் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம், மின்சாரம் தாக்கி, வீடு இடிந்து என 22 பேர் பலியாகி உள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 40 முதல் 55 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. அதன் மூலம் 150 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இது மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாறுகால்கள் முறையாக தூர்வாரப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ரூ.200 கோடியில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிர்கள் கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மழை வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் தவித்து வருவதாகவும், உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு பிரச்சனை நீடிக்கிறது.
    • தென்மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே போக்குவரத்து சீராகும்.

    சென்னை:

    தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    * மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 550 வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

    * தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது.

    * தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது.

    * வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    * மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    * தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு பிரச்சனை நீடிக்கிறது.

    * தென்மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே போக்குவரத்து சீராகும்.

    * ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அடைந்தனர்.

    * 300 பேர் ரெயில் ஸ்ரீவைகுண்டம் நிலையத்திலும், 200 பேர் அருகே உள்ள பள்ளி கட்டிடத்திலும் உள்ளனர்.

    * தென்மாவட்டங்களில் மீட்பு பணியில் 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

    * மீட்பு பணிக்காக ராமநாதபுரத்தில் இருந்து 50 படகுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்கின்றன.

    * கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

    * சென்னையில் இருந்து 10 மோட்டார் பம்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

    இவ்வாறு தலைமைச் செயலாளர் கூறினார்.

    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
    • வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருலுவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாநில அவசர கால செயல்பபாட்டு அறை

    * ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது.

    * தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது. இவ்வளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை.

    * நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

    * வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    * வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன.

    * மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது.

    * 12 ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில் உள்ளனர்.

    * சேவை மைய எண் 1070 என்ற எண்ணிற்கு அழைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    * நெல்லை மாவட்டத்தில் 61 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    * முக்கிய தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    * 3,732 புகார்கள் இதுவரை வந்துள்ளது. 170 வரை புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன.

    இவ்வாறு தலைமைச் செயலாளர் கூறினார்.

    • பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் சாமன்னா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்தார்.

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.100.7 கோடி மதிப்பில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    அப்போது பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் 4ஆம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.1,100 கோடி திட்ட மதிப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று நிலையம் அருகே பவானி ஆற்றங்கரையில் இத்திட்டம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் சாமன்னா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து திருப்பூர் குடிநீர் திட்டம் கோவை தொண்டாமுத்தூர் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேற்கண்ட பணிகளையும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அங்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மண்டல இயக்குநர் இளங்கோவன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் அமுதா, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    • ஏடிஎஸ் வகை கொசுக்கள் மூலம் டெங்கு வேகமாக பரவுவதால் கொசு ஒழிப்பு பணியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற சனிக்கிழமை உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்

    சென்னை:

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. சென்னை மதுரவாயலில் கடந்த வாரம் ரக்ஷன் (வயது4) என்ற சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி விட்டான்.

    இதைத் தொடர்ந்து தமிழக அரசு ஒவ்வொரு பகுதியிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.

    ஏடிஎஸ் வகை கொசுக்கள் மூலம் டெங்கு வேகமாக பரவுவதால் கொசு ஒழிப்பு பணியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    வீடுகள் மற்றும் கடைகளில் தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீர் மூலம் இந்த கொசு உற்பத்தியாவதால் இதை ஒழிக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெங்கு கொசுக்களை ஒழிக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற சனிக்கிழமை உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

    ஓமந்தூர் பன்நோக்கு மருத்துவமனை அரங்கில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மருத்துவ கல்லூரி டீன்கள், மாவட்ட மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ×