search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீட்பு பணியில் 6 ஹெலிகாப்டர்கள்... சென்னையில் இருந்து மோட்டார் பம்புகள் அனுப்பி வைப்பு... சிவ்தாஸ் மீனா
    X

    மீட்பு பணியில் 6 ஹெலிகாப்டர்கள்... சென்னையில் இருந்து மோட்டார் பம்புகள் அனுப்பி வைப்பு... சிவ்தாஸ் மீனா

    • தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு பிரச்சனை நீடிக்கிறது.
    • தென்மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே போக்குவரத்து சீராகும்.

    சென்னை:

    தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    * மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 550 வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

    * தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது.

    * தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது.

    * வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    * மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    * தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு பிரச்சனை நீடிக்கிறது.

    * தென்மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே போக்குவரத்து சீராகும்.

    * ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அடைந்தனர்.

    * 300 பேர் ரெயில் ஸ்ரீவைகுண்டம் நிலையத்திலும், 200 பேர் அருகே உள்ள பள்ளி கட்டிடத்திலும் உள்ளனர்.

    * தென்மாவட்டங்களில் மீட்பு பணியில் 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

    * மீட்பு பணிக்காக ராமநாதபுரத்தில் இருந்து 50 படகுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்கின்றன.

    * கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

    * சென்னையில் இருந்து 10 மோட்டார் பம்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

    இவ்வாறு தலைமைச் செயலாளர் கூறினார்.

    Next Story
    ×