search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.எஸ்.இ."

    • போட்டிகளில் நீல நிற அணி அதிக புள்ளிகள் பெற்று ஓவர் ஆல் சாம்பியன் சுழற்கோப்பையினை வென்றது.
    • விழா நிகழ்வுகளை மாணவர்கள் பெரிஸ் மத்தியூ மற்றும் அத்வெய்தா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு தின விழா கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் விளையாட்டு தின நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.

    மாணவர்கள் நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என குழுவாக கொடி அணிவகுப்பு நடத்தினர். மாணவர்கள் உடற்பயிற்சி நடனம், பாம்-பாம் நடனம், டம்பில்ஸ் நடனம், ஏரோபிக் பந்து நடனம் மற்றும் லெசீம் நடனம் ஆடி மகிழ்வித்தனர்.

    குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ் விழாவில் பங்கேற்று விளையாட்டு தின கொடியேற்றினார்.

    போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 345-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சர்வதேச தடகள பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி பிரிட்டோ ஜாய் கோப்பைகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். போட்டிகளில் நீல நிற அணி அதிக புள்ளிகள் பெற்று ஓவர் ஆல் சாம்பியன் சுழற்கோப்பையினை வென்றது.

    முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்டணி சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர் ஆன்டணி, விளையாட்டு அணி தலைமை மாணவன் ஆதில் பெலிக்ஸ், மாணவிகள் வம்ஷிகா, அதிதி சந்திரசேகர், மெலிட்டா விக்ட்டி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் தலைமையில் நிர்வாக அதிகாரி டெல்பின், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆன்டணி, சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    விழா நிகழ்வுகளை மாணவர்கள் பெரிஸ் மத்தியூ மற்றும் அத்வெய்தா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    • மாநில அளவிலான நடன போட்டிக்கு தகுதி
    • ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு திருவிழா

    நாகர்கோவில் :

    தேசிய அளவில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சகத்தின் மூலம் "கலாஉத்சவ்" என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலைப்பண்பாட்டு திருவிழா மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தப் போட்டியானது பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும். இந்த கல்வி ஆண்டிற்கான நடன போட்டியான செவ்வியல்-பரதநாட்டியம் பிரிவில், நாகர்கோவில், சுங்கான்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 9-ம் வகுப்பு மாணவி அதிதி சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதன்மூலம் மாநில அளவில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கி கவுரவித்தார்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அதிதி சந்திரசேகர் நவம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான நடன போட்டியில் பங்கேற்க உள்ளார். வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும் அவர் மாநில அளவிலான நடன போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.

    • இட்லி, அதிரசம், அச்சுமுறுக்கு, மோதகம் என பலவகை உணவுகள் காட்சிப்ப டுத்தபட்டன.
    • ஆசிரியைகள் ஸ்வீட்லின், ஷைனி, சுதா, வினிதா, டயானா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான் கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

    மாணவர்கள் பெற்றோ ரின் உதவியுடன் தயாரித்துக் கொண்டு வந்த தானிய வகைகளில் செய்த உணவு வகைகளான கம்புஇட்லி, நவதானிய சுண்டல், பச்சைப்பயிறு உருண்டை, சாமைபிரியாணி, வெண் பொங்கல், சத்துமாவு உருண்டை கேழ்வரகு அல்வாலட்டு, எள்ளு ருண்டை, கடலை உருண்டை, கேழ்வரகுகளி, முருங்கைக்கீரை, இட்லி, அதிரசம், அச்சுமுறுக்கு, மோதகம் என பலவகை உணவுகள் காட்சிப்ப டுத்தபட்டன.

    விழாவில் பாரம்பரிய உணவு வகைகள் எவை? அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆசிரியைகள் சுனிமேரி மற்றும் மைக்கேல் ராணி ஆகியோர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

    உணவுத் திருவிழாவினை பள்ளி நிறுவனர் நாஞ்சில் வின்சென்ட் அறிவுரைப்படி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட், முதல்வர் டாக்டர் பீட்டர் அந்தோணி சுரேஷ், ஆரம்பநிலை ஒருங்கிணைப்பாளர் மெர்லின் சோனியா, ஆசிரியைகள் ஸ்வீட்லின், ஷைனி, சுதா, வினிதா, டயானா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    • 18 மாணவ - மாணவிகள் 6 குழுக்களாக இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர்
    • அறிவுத் திறனை மேம்படுத்த ஏதுவாக ஒலி மற்றும் காணொளி சுற்று

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்செலென்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 'பிரேயின் பிளாஸ்ட் சந்திராயன் சேலஞ்ச்' என்ற தலைப்பில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. வின்ஸ் பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கி னார். செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் முன்னிலை வகித்தார்.

    முதல் கட்டமாக 119 மாணவர்களுக்கு தகுதிச்சுற்றாக எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதில் தகுதி பெற்ற 18 மாணவ - மாணவிகள் 6 குழுக்களாக இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர். இப்போட்டி யினை பள்ளியின் முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்டணி நடத்தினார்.

    நிலவின் தென் துருவத்தை முதலில் தொட்ட நாடு என்ற பெருமையினை பெற்றுக் கொடுத்த சந்திராயன் 1,2,3 திட்டங்கள் குறித்து மாணவ - மாணவியர் தெரிந்து கொள்ள, அறிவுத் திறனை மேம்படுத்த ஏதுவாக ஒலி மற்றும் காணொளி சுற்று, பொதுவான கேள்விகள் சுற்று, பஷர் சுற்று, சரியானதை தேர்ந்தெடு சுற்று, அதிவிரைவுச் சுற்று, நபர்களை அடையாளம் காணுதல் சுற்று என 6 சுற்றுகள் நடைபெற்றன. இதில் லேண்டர், ரோவர், ஆர்பிட்டர், லூனார், போலார், த்ரஷ்டர் என 6 குழுக்கள் போட்டியிட்டன. 6 சுற்றுகளில் 90 கேள்விகள் கேட்கப்பட்டன. மாண வர்கள் ஆதில் பெலிக்ஸ், பெரிஷ் மாத்தியூ, யாஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்ட லூனார் அணி முதல் இடத்தை பிடித்தது. மாணவர்கள் ஸ்டீவ் ஆண்டர்சன், ஜெஸ்லின், ஆதவ்ஸ்ரீ ஆகியோரின் ரோவர் அணி 2-ம் இடத்தையும், மாணவர்கள் ஷான் ஜூஸ்வின், அபி னோவ், அதுராம் ஆகியோர் அடங்கிய ஆர்பிட்டர் அணி 3-ம் பரிசினையும் வென்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் பரிசு மற்றும் வெற்றிக் கோப்பையினையும், பதக்கங்களையும் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்கள் கல்வி சுற்றுலா கேரளா சென்றனர்
    • சர்வதேச அளவிலும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி யில் இருந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்கள் கல்வி சுற்றுலா கேரளா சென்றனர். பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி மாணாக்கர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    மேலும் முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணக்கர்கள் உடன் சென்றனர். திருவ னந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர். அறிவியல் ஆராய்ச்சி மையம், சுற்றுலாத்தலங்க ளான விழிஞ்ஞம் கலங்கரை விளக்கு, பூவாறு கடற்கரை தீவு போன்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா சென்றனர்.

    முன்னதாக சுற்றுலா செல்லும் தலங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியரின் விளக்கவுரை யுடன் கூடிய காணொலி காட்சியும் காண்பிக்கப் பட்டது. திருவனந்தபுரம், பலவகையான ஆய்வகங் களை கொண்ட சி.எஸ்.ஐ. ஆர். அறிவியல் ஆராய்ச்சி மையமானது, தேசிய அள விலும், சர்வதேச அளவிலும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அதனை குறித்து மாணாக்கர்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும் அமைந்திருந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தேர்வு எழுதிய 17 பேரும் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர்.
    • மாணவி ரோஷன் சபிக்கா கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 17 மாணவ, மாணவிகள் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை எழுதினர். இதில் தேர்வு எழுதிய 17 பேரும் சிறந்த மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

    இப்பள்ளி மாணவி ரோஷன் சபிக்கா கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பாடவாரியாக அவர், தமிழில் 98, அறிவியலில் 92, சமூக அறிவியலில் 94 மதிப்பெண்களை பெற்று 94 சதவீதத்துடன் பள்ளியில் முதலிடத்தை பிடித்தார்.

    தொடர்ந்து 2-வது முறையாக 100 சதவீத வெற்றியை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களையும், மாணவ- மாணவிகளையும் பள்ளியின் நிறுவனர் முகமது பண்ணையார், தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை படைத்தது.
    • முதல்வர் பிரேமசித்ரா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

    காரைக்குடி

    மத்திய அரசு இடை நிலைக்கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி செந்தூரி நாயகி சிவக்குமார் 95.3 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

    மாணவன் தனுஷ்ராஜ் 95 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், மாண வன் ராகுல் ராஜ்யவர்தன் 91.2 சதவீத மதிப்பெண்களு டம் பள்ளி அளவில் 3-ம் இடத்தை பெற்றுள்ளார்.

    10-ம் வகுப்பு தேர்வில் மாணவி ஹர்ஷிதா 97.3 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், மாணவன் விஜயகுமார், மாணவி ஸ்ரீயா, சிவக்குமார் இரு வரும் 96 சதவீத மதிப்பெண்க ளுடன் 2-ம் இடத்தையும், மாணவன் கார்த்திக் பாலன் 95.5 சதவீத மதிப்பெண்க ளுடன் 3-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் தமிழில் ஒருவரும், கணிதத்தில் இருவரும், ஆர்ட்டிபீஷியல் இண்டெலி ஜென்ஸ் பாடத்தில் 7 பேர் 100 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதனை மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் குமரேசன், துணை தாளாளர் அருண்குமார், ட்ரஸ்டிகள் சாந்தி குமரேசன், ப்ரீத்தி அருண்குமார், முதல்வர் உஷாகுமாரி, துணை முதல்வர் பிரேமசித்ரா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

        

    • சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் தமிழ் மொழியில்100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
    • சிறந்த வெற்றியை பெற்றதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார் வாழ்த்தினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் முகமது பாஹிம் 91.6 சதவீதம் பெற்று முதலிடமும், முகமது உசேன் 83.4 சதவீதம் பெற்று 2-ம் இடமும், முகமது சபீர் 82.2 சதவீதம் பெற்று 3-ம் இடம் பிடித்தனர்.

    3 மாணவர்கள் தமிழ் மொழியில்100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளி சராசரி மதிப்பெண் 70 சதவீதம் ஆகும். பொதுத்தேர்வை எதிர்கொண்ட முதல் ஆண்டிலேயே சிறந்த வெற்றியை பெற்றதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார், பள்ளியின் தாளாளர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

    ×