செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை படைத்தது.முதல்வர் பிரேமசித்ரா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
சாதனை மாணவர்களுடன் ஆசிரியர்கள் உள்ளனர்.
சாதனை மாணவர்களுடன் ஆசிரியர்கள் உள்ளனர்.
Published on

காரைக்குடி

மத்திய அரசு இடை நிலைக்கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி செந்தூரி நாயகி சிவக்குமார் 95.3 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

மாணவன் தனுஷ்ராஜ் 95 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், மாண வன் ராகுல் ராஜ்யவர்தன் 91.2 சதவீத மதிப்பெண்களு டம் பள்ளி அளவில் 3-ம் இடத்தை பெற்றுள்ளார்.

10-ம் வகுப்பு தேர்வில் மாணவி ஹர்ஷிதா 97.3 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், மாணவன் விஜயகுமார், மாணவி ஸ்ரீயா, சிவக்குமார் இரு வரும் 96 சதவீத மதிப்பெண்க ளுடன் 2-ம் இடத்தையும், மாணவன் கார்த்திக் பாலன் 95.5 சதவீத மதிப்பெண்க ளுடன் 3-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்வில் தமிழில் ஒருவரும், கணிதத்தில் இருவரும், ஆர்ட்டிபீஷியல் இண்டெலி ஜென்ஸ் பாடத்தில் 7 பேர் 100 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாதனை மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் குமரேசன், துணை தாளாளர் அருண்குமார், ட்ரஸ்டிகள் சாந்தி குமரேசன், ப்ரீத்தி அருண்குமார், முதல்வர் உஷாகுமாரி, துணை முதல்வர் பிரேமசித்ரா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com