search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை சீரமைப்பு"

    • நீதிமன்றம் உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன்? ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    • விவசாயிகளின் நலன் கருதி, வேளாங்குளம் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரை அய்யர்பங்க ளாவைச் சேர்ந்த கோவிந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறேன். மதுரை ஐகோர்ட்டில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளேன்.

    எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வேளாங்குளம் ஆகும். மழையை நம்பித்தான் இந்த பகுதி விவசாயிகள் உள்ளனர். வேளாங்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் அனைத்தும் கருவேல மரங்களால் ஆக்கிரமித்து ள்ளன. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் இந்த கண்மாய்க்கு வருவது தடைபட்டுள்ளது.

    இங்குள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் விவசாயிகளின் நலன் கருதி, வேளாங்குளம் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    இதே போல, பெரிய கோட்டையில் இருந்து முத்தனேந்தல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விலக்கில் இருந்து சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது.

    இதை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இன்னும் சில மாதங்களில் வேளாங்குளம் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.

    இங்குள்ள சாலையை சீரமைத்து போக்குவரத்திற்கு வசதி செய்து தரும்படியும், கண்மாய் மற்றும் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியிருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எங்கள் மனுவின் அடிப்படையில் வேளா ங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சி.எம். ஆறுமுகம் ஆஜராகி, வேலாங்குளம் கிராமத்தினரின் வாழ்வா தாரம் விவசாயத்தை நம்பித்தான் உள்ளது. அதற்கு ஆதாரமாக உள்ள கண்மாய் வரத்து கால்வாய்களை தூர் வாருவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேளாங்குளம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை சாலை சீரமை க்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    பின்னர் நீதிபதிகள், சாலையை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கேள்வி எழுப்பினர்.

    பின்னர் இது தொடர்பாக மனுதாரர் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரவும், சாலையை சீரமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாக புகார்
    • ரோட்டில் தேங்கிய ஜல்லி கற்கள், மணல் திட்டு அகற்றம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை, தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஏலகிரி மலையில் முருகன் கோவில் அருகில் உள்ள வளைவுகளில் அவ்வப்போது சிறு ஜல்லி கற்கள், மணல்கள் மழைக் காலங்களில் பரவி காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

    இந்த நிலையில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மணிசுந்தரம், உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உத்தரவின்பேரில் சாலை ஆய்வாளர் வெங்கடேசன் சாலை பணியாளர்களைக் கொண்டு மழையினால் ஏற்பட்ட ஜல்லி கற்களையும், மணல் பரப்பினையும் அகற்றினர்.

    • சாலையை சீரமைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
    • கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியம் கடப்பொகத்தி பகுதியில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பில் கீழப்பாவூர் யூனியன் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக புதிய சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் மாரியப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் பிரிவு தலைவர் கணபதி, மாவட்ட ராணுவ பிரிவு துணைத் தலைவர் சுரேஷ், இளைஞரணி துணைத்தலைவர் முரளிதரன் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அவர்களுடன் கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அடுத்த 45 நாட்களுக்குள் சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்திகோடு ஊராட்சியில் உள்ள மணலிக்காடு சி.எஸ்.ஐ. ஆலயம் முதல் முத்திரங்குளம் செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மணலிக்காடு சி.எஸ்.ஐ ஆலயம் முதல் முத்திரங்குளம் செல்லும் சாலையில் காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து சாலையில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் முடிவடந்ததையடுத்து கிள்ளியூர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரிய அருள் தாஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜோபி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆசீர் பிறைட் சிங், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் எட்வின் ஜோஸ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை அமைத்தவர்கள் அப்பகுதியில் இருந்த அடிபம்புடன் சேர்த்து சாலை அமைத்து விட்டனர்.
    • சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் மிகவும் வைரலாகியது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி.

    இந்த பேரூராட்சியில் உள்ள 12-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக சாலை ஒன்று இருந்தது. ஆனால் அந்த சாலை கடந்த சில மாதங்களாகவே பழுதடைந்து காணப்பட்டது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டதோடு, பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத நிலையும் இருந்தது.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சாலை அமைத்து தர வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேரூராட்சி அதிகாரிகள் சூளேஸ்வரன்பட்டி பகுதிக்கு சென்று 12-வது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை சீரமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர்களும் சாலை சீரமைப்பதற்கான பணியை எடுத்தனர்.

    அதன்மூலம் அந்த பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இந்த நிலையில் சாலை அமைத்தவர்கள் அந்த பகுதியில் இருந்த அடிபம்புடன் சேர்த்து சாலை அமைத்து விட்டனர். இதனை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் மிகவும் வைரலாகியது.

    இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, 12-வது வார்டில் உள்ள அடிபம்பு பழுதடைந்து மக்களுக்கு பயன்படாமல் இருந்தது.

    அப்போது மக்கள் சாலை அமைக்க வேண்டும் என கேட்டனர். சாலை அமைக்கும் போது அடிபம்பை அகற்றினால், அங்கு குழி ஏற்பட்டு விடும். அதனால் அடிபம்பையும் சேர்த்து சாலை அமைத்து விட்டோம். வேண்டும் என்று செய்யவில்லை. மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் செய்தோம். இன்று அடிபம்பை அகற்றி விட்டு, அதற்கான பைப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. இன்று பணி முடிந்து விடும் என்றனர்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்
    • திருவட்டார் அரசு சுற்றுலா மாளிகையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்தாய்வு.

    நாகர்கோவில்:

    திரு வட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டாத்துறை மற்றும் குமரன்குடி ஊராட்சி பகுதி களில் சாலை அமைக் கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து திருவட்டார் அரசு சுற்றுலா மாளிகையில் நெடுஞ்சாலைத்துறை அலு வலர்களுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது:-

    முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான அரசு பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு வளர்ச்சிதிட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்ப டையில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் காட் டாத்துறை ஊராட்சிக்குட் பட்ட பூவன்கோடு பகுதி யில் ரூ.79 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி மற்றும் குமரன்குடி ஊராட்சி கட் டைக்கால் பகுதி யில் ரூ.43 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக் கும் பணிகள் என ரூ.1.22 கோடி மதிப்பில் பணி தொடங்கி வைக்கப்பட்டுள் ளது.

    மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் ஒப்புதலுடன் குமரி மாவட்டத்தில் சேதம டைத்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கும் விதமாக தக்கலை (நெ) கட் டுமானம் மற்றும் பராம ரிப்பு உட்கோட்டத்தில் பர சேரி முதல் திங்கள்சத்தை, புதுக்கடை சாலை வரை ரூ.81.20 லட்சம் மதிப்பிலும், குமாரகோயில் சாலை ரூ.29.50 லட்சம் மதிப்பி லும். திங்கள் சந்தை முதல் திருவட்டார் சாலையும், மார்த்தாண்டம் முதல் பேச்சிப்பாறை சாலை யும் இணைக்கும் சாலை ரூ.145.94 கோடி மதிப்பி லும், குளச்சல் முதல் திருவட்டார். சாலை வரை ரூ.49.60 லட்சம் மதிப்பிலும், குழிக்கோடு சாலை ரூ.29.08 லட்சம் மதிப்பிலும், சூரப் பள்ளம் முதல் ஈத்தங்காடு சாலை வரை ரூ.23,90 லட் சம் மதிப்பிலும், இரணியல் முதல் சத்திரம், கல்குறிச்சி சாலை வரை ரூ.24.99 லட் சம் மதிப்பில் என மொத் தம் ரூ.3.84 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

    மேலும், குழித்துறை (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத் தில் இரவிபுதூர் கடை முதல் கருங்கல் சாலை வரை ரூ.1.019 கோடி மதிப்பிலும், மார்த்தாண்டம் முதல் கருங்கல் சாலை வரை ரூ.48.50 லட்சம் மதிப்பிலும், இரவிப்புதூர் கடை முதல் பயணம் சாலை வரை ரூ.80.67 லட்சம் மதிப்பிலும், குளச்சல் முதல் திருவட்டார் சாலை வரை ரூ.19.20 லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் என மொத்தம் தக்கலை மற்றும் குழித்துறை உட்கோட்டத் தில் ரூ.6.34 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

    இவ்வாறு அவர் தெரி வித்தார். நிகழ்வுகளில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் ஜாண்பிரைட் (கண்ண னூர்), ராஜ் (காட்டாத் துறை), ஊராட்சி மன்ற தலைவர்கள் பால்சன் (குமரன்குடி), ஹெப்சிபாய் கிறிஸ்டி (ஏற்றக்கோடு) உள் ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையை சீரமைக்க பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள பிள்ளைக்குழி (மயானம்) பகுதியில் உள்ள மண்சாலை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது.இந்தசாலை 3 கிலோமீட்டர் தூரம் சென்று மெயின் ரோட்டை அடையும். இந்தப்பகுதி முழுவதும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி ஆகும்.

    எனவே இந்த சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் உரிய முறையில் பராமரிக்காததால் இந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள்அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின்விளக்குகள் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளில் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

    • சாலையின் நடுவில் உள்ள செடிகளைசுற்றி உள்ள களையை எடுத்தும் பராமரித்தும் மண் கொட்டி சமப்படுத்தி வருகின்றனர்.
    • முக்கிய வீதிகள் மற்றும் சாலைகள் தூய்மைப்படுத்தும் பணியிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் வருகிற 16-ந்நதேதி நடைபெறும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடுமலை வருகிறார்.

    முதல்வரின் வருகையை ஒட்டி உடுமலை நகரை தூய்மை நகரமாக்க நகராட்சி பணியாளர்கள் சாலையின் நடுவில் உள்ள செடிகளைசுற்றி உள்ள களையை எடுத்தும் பராமரித்தும் மண் கொட்டி சமப்படுத்தி வருகின்றனர். மேலும் உடுமலையில் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகள் தூய்மைப்படுத்தும் பணியிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ×