என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த சாலையை சீரமைத்த காட்சி.
சேதமடைந்த சாலை சீரமைப்பு
- வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாக புகார்
- ரோட்டில் தேங்கிய ஜல்லி கற்கள், மணல் திட்டு அகற்றம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை, தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஏலகிரி மலையில் முருகன் கோவில் அருகில் உள்ள வளைவுகளில் அவ்வப்போது சிறு ஜல்லி கற்கள், மணல்கள் மழைக் காலங்களில் பரவி காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
இந்த நிலையில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மணிசுந்தரம், உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உத்தரவின்பேரில் சாலை ஆய்வாளர் வெங்கடேசன் சாலை பணியாளர்களைக் கொண்டு மழையினால் ஏற்பட்ட ஜல்லி கற்களையும், மணல் பரப்பினையும் அகற்றினர்.
Next Story






