search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமத்துவ மக்கள் கட்சி"

    • வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • விண்ணப்பித்தவர்களில் தகுதியான வர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோட்டாச்சியர் மகாலெட்சுமி உத்தரவிட்டார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை அடுத்த லிங்கம்பட்டியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    லிங்கம்பட்டி பகுதியில் வசிக்கும் வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வருவாய் துறையிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, துணை செயலாளர் சேகர் உள்பட அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கோட்டாட்சியர் அலு வலகம் முன் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்தனர்.

    உடனடியாக தாசில்தார் சுசிலாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியான வர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் உத்தரவிட்டார். தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த கோட்டாச்சியர் மகாலெட்சுமியின் செயலை கண்டு வியந்த பெண்கள் அவருக்கு நன்றி தெரிவித்துச் சென்றனர்.

    • தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவங்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
    • தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, குறிப்பாக இரவு நேர மின்வெட்டினை சரி செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கட்சியின் சென்னை தலைமை அலுவலகத்தில் துணைப்பொதுச் செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் என்.சுந்தர் விளக்கவுரை வழங்கினார்.

    * அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமாரின் பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் கொண்டாடுவது.

    * சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் ஜூலை மாதம் இறுதிக்குள் சுமார் 500 நிர்வாகிகள், 10,000 புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை மேலும் வலுப்படுத்துவது.

    * வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி இயக்கத்தின் துவக்க விழாவை தலைவர் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவை சிறப்பாக கொண்டாடுவது.

    * தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவங்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    * தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, குறிப்பாக இரவு நேர மின்வெட்டினை சரி செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மாணவர்களையும், இளைஞர்களையும் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சென்னையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதை தடுத்து அதை விற்பவர்கள் மீது காவல்துறையினர் தனிப்படை அமைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து தொற்று நோய் பரவாமல் இருக்க தேவையான தீவிர முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில பொருளாளர் சுந்தரேசன், வேலூர் மண்டல அமைப்புச் செயலாளர் ஞானதாஸ் , மாநில இளைஞரணி செயலாளர் கிச்சா ரமேஷ் , மாநில மாணவர் அணி செயலாளர் அக்வின் நோயல், தலைமை பேச்சாளர் வேந்தன் மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
    • வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனாவும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்.

    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.

    வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனாவும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்.

    அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உற்றார்-உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொண்டு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக் கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் தலைமையில் கலெக்டரை சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.
    • தரமற்ற தார்சாலை போடப்பட்டதால் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    சாத்தான்குளம்:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆணைப்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், சாத்தான்குளம்- புதுக்குளம் விலக்கு தரமற்ற தார்சாலை போடப்பட்டதால் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.

    ஒன்றிய செயலாளர்கள், சாத்தான்குளம் ஜான் ராஜா , உடன்குடி அழகேசன், கருங்குளம் முருகேசன் , திருச்செந்தூர் சீமான், ஸ்ரீவைகுண்டம் தேவராஜ் , மாவட்ட மாணவர் அணி செயலாளர் சித்திரவேல், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சபரி செல்வம், திருச்செந்தூர் நகர செயலாளர் திருமலைக்குமார் மற்றும் அனைத்து ஒன்றியத்திலுள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவிப்பு
    • அனைத்து கட்சியினரும் மாலை அணிவிப்பு

    நாகர்கோவில் :

    மார்ஷல் நேசமணியின் பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் வேப்ப மூட்டில் உள்ள மணிமண்ட பத்தில் அவரது சிலைக்கு கலெக்டர் அரவிந்த் தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திள்ளை செல்வம், மீனவர் அணி முன்னாள் அமைப்பாளர் பசலியான், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், மார்ஷல் நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை யில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் வேல்தாஸ், மற்றும் ஜெயசீலன், அக்‌ஷயா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமையில் மாநில துணை பொது செயலாளர் சுந்தர் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில நிர்வாகிகள் குரூஸ் திவாகர், நட்சத்திர வெற்றி, எட்வின் செல்வராஜ், கணேசன், அவைத்தலைவர் புளியடி பால்ராஜ், பொருளாளர் ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், செண்பக வள்ளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ராஜபாண்டி, குமரன், பால்அகியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×