search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திப்பு விழா"

    • இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
    • மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவு படுத்தி உரையாடினார்கள்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கம்பை நல்லூர் ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிறுவனர் எம்.வேடியப்பன், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    முன்னாள் மாணவர் கம்பை ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சக்திவேல், மதி, குமார், கெலவள்ளி மனோகரன், கம்பை நல்லூர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் பெரியண்ணன், வெங்கடேசன், ஹரிதாஸ், ஸ்ரீ ராமுலு, பன்னீர்செல்வம், ஜெயராமன், ராஜகோபால், ஆசிரியை பானுமதி மற்றும் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் பழனி ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவு படுத்தி உரையாடினார்கள்.

    அப்போது பணியாற்றிய ஆசிரியர்களும் அப்போதைய ஆசிரிய பணியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    • 100க்கும் மேற்பட்ட போலீசார் சந்திப்பு விழா பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • போலீசார் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு, குற்றவியல் போக்குவரத்து, தனிபிரிவு துறைகளில் பணியாற்றும் 2009 ஆண்டு காவல் பள்ளியில் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் சந்திப்பு விழா பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட போலீசார் பாரம்பரிய உடைகள் அணிந்து ஒன்றாக குழு புகைப்படம் எடுத்தும் பாட்டுகள் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் பயிற்சி பள்ளியில் தன்னுடன் பயிற்சி பெற்ற நண்பர்களுடன் குழு, குழுவாக "செல்பி"போட்டோ எடுத்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு நிகழ்வின் மூலம் எங்களது மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு ஏற்படுவதாக சந்திப்பில் பங்கேற்ற போலீசார் கூறினர்.

    ×