search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத் பூஜை"

    • நீர் நிலைகளில் சூரியன் உதிக்கும் திசையில் தீப ஆராதனை.
    • சூரியனைப் போற்றி வணங்கும் பண்டிகை சத் பூஜை.

    சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் பண்டிகையாக சத் பூஜை கொண்டாடப்படுகிறது. சத் பூஜை' எனப்படும் பூஜை பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சலிகள்' மத்தியில் இந்த திருவிழா மிகவும் பிரபலமானது. அவர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சூரியனை நோக்கி பூஜை செய்வார்கள்.

    தமிழர்கள் உழவர் திருநாளை பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கும் நிகழ்வு போல வடமாநிலத்தவர்கள் சூரியன் அஸ்த்தமனம் மற்றும் சூரிய உதயத்தை வணங்கும் சத் பூஜை நிகழ்வு நடைப்பெற்றது.

    சென்னையில் சவுகார்பேட்டை, வண்ணார்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவெற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதியை வசிக்கும் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் சென்னை எண்ணூர் கடற்கரை மற்றும் நீர் நிலைகளில் வழிபட்டனர்.

    வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பூ பழம் இனிப்புகள் மற்றும் கையில் கட்டக்கூடிய நோன்பு கயிறு உள்ளிட்டவைகளை கூடையில் வைத்து கொண்டு வந்து பெண்கள் 36 மணி நேரம் விரதம் இருந்து பாரம்பரிய உடை அணிந்து நெற்றியில் திலகமிட்டு தண்ணீரில் இறங்கி தீப ஆராதனைகளை செய்து, தங்களது குடும்பம் நன்மை வேண்டியும், வியாபாரம் செழிக்கவும் சூரிய ஆஸ்த்தமனத்தையும், மறுநாள் சூரிய உதயத்தின் போது சூரியனை வணங்கியும் ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    இந்த நிகழ்வில், சென்னையில் வசிக்கும் ஏராளமான வட மாநிலத்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நீர் நிலைகளில் சூரியனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 6:20 மணிக்கு கடற்கரை ஓரம் மற்றும் நீர் நிலைகளில் சூரியன் உதிக்கும் திசையில் தீப ஆராதனை செய்து வழிபட்டார்கள்.

    • தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் நவம்பர் 21-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் அடுத்தநாள் காலை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சென்றடையும்.
    • மறுமார்க்கமாக புவனேஷ்வரில் இருந்து நாளை மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் புறப்படும் சிறப்பு ரெயில் அடுத்தநாள் மதியம் தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து நாளை (15-ந்தேதி) மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06079) அடுத்தநாள் இரவு 8.45 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் சந்திராகாச்சியை சென்றடையும்.

    மறுமார்க்கமாக சந்திராகாச்சியில் இருந்து நவம்பர்16, 23-ந்தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06080) 18, 25-ந்தேதி காலை 9.35 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

    இதேபோல, தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் நவம்பர் 21-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06081) அடுத்தநாள் காலை 9.55 மணிக்கு ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சென்றடையும்.

    மறுமார்க்கமாக புவனேஷ்வரில் இருந்து நாளை மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் 12.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06082) அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×