search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை:"

    • பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • படு காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    நாடு முழுவதும் தீபா வளி பண்டிகை நேற்று உற்சா கமாக கொண்டா டப்பட்டது. தீபாவளி பண்டிகையை யொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    அதனையும் மீறி பாதுகாப்பின்றி பட்டாசு வெடித்து பலர் காயம் அடைந்துள்ளனர். கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் ஆதர்ஸ் வித்யாதரன் (வயது 12). 6-ம் வகுப்பு மாணவர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி இவர் தனது வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் ஒரு பட்டாசை பற்ற வைத்தார். அது வெடி க்கவில்லை. இதனையடுத்து ஆதர்ஸ் வித்யாதரன் அருகே சென்று பார்த்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசு வெடித்தது.

    இதில் சிறுவனின் வலது கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவை துண்டானது. இதில் படு காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறா ர்கள். இது குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீரணத்தம் ரோட்டில் முதியோர் காப்பகம் உள்ளது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பக வார்டன் பிரான்சனை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் ரோட்டில் முதியோர் காப்பகம் உள்ளது. இங்கு கோவையை சேர்ந்த ஜெபஸ்டின் (வயது 65) மற்றும் அவரது மனைவி ஜெயமணி(60) தங்கி உள்ளனர்.

    காப்பகத்திலேயே ஜெயமணி சமையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஜெயமணி காப்பகத்தில் இருந்தார். அப்போது வெளியே அவரது கணவர் ஜெபஸ்டினின் அலறல் சத்தம் கேட்டது.

    அவர் வெளியே சென்று பார்த்த போது காப்பக வார்டன் பிரஸ் காலனியை சேர்ந்த பிரான்சன்(44) என்பவர் குச்சியால் ஜெபஸ்டினை தாக்கி கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயமணி, வார்டனை கண்டித்தார்.

    அப்போது வார்டன் பிரான்சன் அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கீழே தள்ளி விட்டார். வார்டன் தாக்கியதில் ஜெபஸ்டினு க்கு மூக்கு, காதில் ரத்தம் கொட்டியது.

    இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்ப ட்டார். பின்னர் இது குறித்து ஜெயமணி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பக வார்டன் பிரான்சனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காப்பகத்தில் முதியவரை வார்டன் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர்.
    • கடந்த 1 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

    கோவை, :

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 28 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு மிஸ்டுகால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

    இத னையடுத்து இளம்பெ ண் தனது கணவர் வெளியே செல்லும் நேரத்தில் அந்த வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இது குறித்து அவர் தனது மனைவியிடம் கேட்ட போது அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனையடுத்து இளம்பெண் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கணவரை பிரிந்து கடந்த 1 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்தபடி அவர் தனது கள்ளக்காதலனுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கோட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

    • கருத்தரங்கு கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.
    • மழை நன்றாக பெய்தால் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது

    கோவை,

    கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் தண்ணீர் 2022 என்ற தலைப்பில் கருத்தரங்கு கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் மேலாண்மைதுறை சார்ந்த வல்லுநர்கள் பலர் பங்கேற்று பேசினர்.

    பின்னர் பல்கலை இணை துணை வேந்தர் ஜேம்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டில் பல மாநிலங்களில் நீர் ஆதாரங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. கால நிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணமாகும்.

    இமயமலையில் பனிசிகரங்கள் வேகமாக உருகி வருகின்றன.

    இதனால் வெள்ளம், வறட்சி போன்றவை அதிகம் காணப்படுகிறது. கடல்நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கேரளா, ஒடிசா, காஷ்மீ்ர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் அதிகம் ஏற்படுகிறது. நீர் ஆதாரங்களின் இன்றைய நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.

    தமிழகத்தை பொருத்தவரை நீர் ஆதாராங்களின் நிலையை பருவமழை தான் நிர்ணயம் செய்கின்றன.

    மழை நன்றாக பெய்தால் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. பருவ மழை சரிவர பொழியவில்லை என்றால் வறட்சி ஏற்படும்.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நீர் ஆதாரங்களின் இன்றைய நிலை மற்றும் அதை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் கருத்தரங்கில் வல்லுநர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தனியார் ஆசிரமத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு மொட்டையடிக்கப்பட்டது
    • 2 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வடவள்ளி, ஜூலை.26-

    கோவை மாநகரில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கியிருந்த ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டனர்.

    அவர்கள் கோவை அருகே தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்களை மொட்டை அடித்து தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் காப்பகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரூர் தாசில்தார் இந்துமதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அந்த காப்பகம் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரத்தைச் சேர்ந்த காப்பக நிர்வாகி ஜிபின் பேபி (வயது 44), பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் (43), சென்னையைச் சேர்ந்த செல்வின் (49), அருண் (36), தர்மபுரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (46), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜார்க் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது மிரட்டல், தாக்குதல், அத்துமீறி அடைத்து வைத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் காப்பக நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மாரியம்மன் கோவில் மைதானத்திலும், அட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் ஆசிரமம் முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு போராட்டக்காரர்கள் யாரும் நுழையாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

    • காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை ஊழியர் ஒருவர் பார்த்தார்.
    • பீரோவில் இருந்த ரூ.5240 ஐ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இரவில் பூட்டை உடைத்து யாரோ திருடி சென்று உள்ளனர்.

     கோவை:

    கோவை ரத்தினபுரி செல்லப்பன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(55). அதேபகுதியில் வாழைக்காய் மண்டி வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மண்டியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை ஊழியர் ஒருவர் பார்த்தார்.

    உடனே அவர் இது குறித்து சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்த போது உள்ளே பீரோவில் இருந்த ரூ.5240 ஐ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இரவில் பூட்டை உடைத்து யாரோ திருடி சென்று உள்ளனர். இது குறித்து சீனிவாசன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பணம் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். 

    • ஒரு கிட்னியை ரூ. 6.2 கோடிக்கு பெற்று கொள்வதாக கூறியதாகவும், அந்த டாக்டரை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் தெரிகிறது
    • கிட்னி தானமாக பெற்றுகொள்வதாக பணம் மோசடி நடைபெற்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவரும், குழந்தைகளும் உள்ளனர். இவர் குடும்ப வறுமை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார்.

    அப்போது அவரிடம் உறவினர் ஒருவர் பெங்களூரில் உள்ள ஆஸ்பத்தரியில் ஒரு கிட்னியை ரூ. 6.2 கோடிக்கு பெற்று கொள்வதாக கூறியதாகவும், அந்த டாக்டரை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் தெரிகிறது.

    இந்நிலையில், அந்த பெண் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரை சந்தித்துள்ளார். அப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் பெங்களூரை சேர்ந்த டாக்டர் தாமஸ் அரோன் பெனா (45) என்பவர் ரூ.6.2 கோடிக்கு உங்களது சிறுநீரகத்தை பெற்று கொள்கிறோம்.

    ஆனால் அறுவை சிகிச்சை கட்டணமான ரூ. 4 லட்சத்து 14ஆயிரத்து 269-யை முன்கூட்டியே கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பின்னர் நீங்கள் கட்டிய பணத்துடன் ரூ.6.2 கோடி உங்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் தனது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு கிட்னியை தானமாக கொடுக்க முடிவு செய்துள்ளார்.

    இதனை அவர் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அதன்பிறகு தனக்கு தெரிந்தவர்களிடம் பணத்தை கடனாக திரட்டி டாக்டரின் வங்கி கணக்கில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.4,14,269யை செலுத்தி உள்ளார். இந்த தகவல் எப்படியோ அந்த பெண்ணின் குடும்ப த்தினருக்கு தெரியவந்தது.

    உடனே அவர்கள் கிட்னி தானமாக கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த துடன், கொடுத்த பணத்தை திருப்பி வாங்குமாறு தெரிவி த்துள்ளனர். பின்னர் தனது முடிவை மாற்றிகொண்ட அந்த பெண் தான் கொடுக்க பணத்தை திருப்பி கேட்டபோது டாக்டர் தாமஸ் அரோன் பெனா கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிட்னி தானமாக பெற்றுகொள்வதாக பணம் மோசடி நடைபெற்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்க நகைகளை செய்து கொடுக்காமல் தனது கடையை பூட்டிவிட்டு மாயமாகிவிட்டார்.
    • ரூ.7 லட்சம் மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளுடன் மாயமான பிரதீப் போலோவை தேடி வருகிறார்கள்

    கோவை:

    கோவை பொன்னயராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் அந்த பகுதியில் தங்க நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் 25-ந்தேதி தன்னிடம் உள்ள 72 கிராம் தங்கத்தை நகைகளாக செய்வதற்கு கே.ஜி வீதியில் தங்க நகைக்கூடம் வைத்து நடத்தி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரதீப் போலோ என்பவரிடம் கொடுத்தார்.

    ஆனால், அவர் தங்க நகைகளை செய்து கொடுக்காமல் தனது கடையை பூட்டிவிட்டு மாயமாகிவிட்டார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    அக்கம்பக்கத்தில் விசாரித்த போது பிரதீப் போலோ ஏற்கனவே திலீப் என்பவரிடம் இருந்து 35 கிராம், சூரிய நாராயணன் என்பவரிடம் இருந்து 65 கிராம் தங்கத்தை பெற்று அவர்களையும் ஏமாற்றிவிட்டு மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆனந்தகுமார் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.7 லட்சம் மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளுடன் மாயமான பிரதீப் போலோவை தேடி வருகிறார்கள்.

    ×