என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாழைக்காய் மண்டியில் பணம் திருட்டு
- காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை ஊழியர் ஒருவர் பார்த்தார்.
- பீரோவில் இருந்த ரூ.5240 ஐ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இரவில் பூட்டை உடைத்து யாரோ திருடி சென்று உள்ளனர்.
கோவை:
கோவை ரத்தினபுரி செல்லப்பன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(55). அதேபகுதியில் வாழைக்காய் மண்டி வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மண்டியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை ஊழியர் ஒருவர் பார்த்தார்.
உடனே அவர் இது குறித்து சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்த போது உள்ளே பீரோவில் இருந்த ரூ.5240 ஐ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இரவில் பூட்டை உடைத்து யாரோ திருடி சென்று உள்ளனர். இது குறித்து சீனிவாசன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பணம் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
Next Story