search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோதுமை சமையல்"

    • நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிகுந்த உணவாக கோதுமை இருக்கிறது.
    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1/2 கப்

    கோதுமை மாவு - 1/4 கப்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு கோதுமை தோசை ரெடி!!

    • இந்த சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்

    சின்ன வெங்காயம் - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 1

    மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி

    மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

    ஓமம் - 1/2 தேக்கரண்டி

    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.

    பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.

    சப்பாத்திக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் செய்து சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பில் போட்டு இருபக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான மசாலா சப்பாத்தி ரெடி.

    • மாலையில் குழந்தைகளுக்கு இந்த சிற்றுண்டியை செய்து தரலாம்.
    • இந்த தோசை சுவையானதும் மட்டுமல்ல சத்தானதும் கூட.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,

    வெல்லம் (பொடித்தது) - 1 கப்,

    பச்சரிசி மாவு - கால் கப்,

    தேங்காய் (துருவியது) - கால் மூடி,

    ஏலக்காய் - 4,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.

    பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.

    வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

    வெல்லத்திற்கு பதில் கருப்பட்டியை சேர்த்தும் செய்யலாம்.

    • இது சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல காலை உணவு.
    • சம்பா கோதுமை ரவையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை ரவை - 1 கப்

    பாசி பருப்பு - அரை கப்

    உப்பு - சுவைக்கு

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    தண்ணீர் - 3 கப்

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    நெய் - 3 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    இஞ்சி - 1 துண்டு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    முந்திரி - 6

    செய்முறை :

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசி பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் போட்டு 3/4 தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.

    அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்துக்கொள்ளுங்கள். சற்று வாசனை வரும் அப்போது வேக வைத்த பாசி பருப்புடன் ரவையை சேர்த்து கிளறுங்கள்.

    பின் 3 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். குக்கரை மூடி விடுங்கள். 2-3 விசில் வரும் வரைக் காத்திருங்கள்.

    விசில் வந்ததும் குக்கரை திறந்து சூடு பதத்திலேயே கிளறுங்கள்.

    தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டி கிளறுங்கள்.

    அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை வெண் பொங்கல் தயார்.

    கேழ்வரகில் களி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. கோதுமை மாவிலும் களி செய்யலாம். இந்த களி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 கப்,
    உப்பு - சிறிது,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    தண்ணீர் - 3 கப்.



    செய்முறை :

    கோதுமை மாவில் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

    அடிகனமான கடாயில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவினை ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.

    கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.

    சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.

    சத்தான கோதுமை மாவு களி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×