search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேக விழா"

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
    • விழாவையொட்டி பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி நகரம், எஸ்.வி.சாலையில் அமைந்துள்ள பூவாடைக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாக சாலை பூஜைகளும், அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாக சாலையில் இருந்து மேள தாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து பூவாடைக்காரி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • கடந்த மாதம் ஜூலை 17-ம் தேதி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவானது மகா கணபதி பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • தாரை தப்பட்டை முழங்க அர்ச்ச கர்கள் கோவில் கலசத்திற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், உங்கரான அள்ளி ஊராட்சியில் உள்ள பருத்தி நத்தம், உத்தனூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    கடந்த மாதம் ஜூலை 17-ம் தேதி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவானது மகா கணபதி பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, சாமி சிலைகள் ஊர்வலம், முளைப்பாரி அழைத்து வருதல், யாகசாலை அலங்காரம், மற்றும் விக்னேஸ்வர பூஜை, திருவிளக்கு வழிபாடு, தீர்த்தக்குடம் புறப்படுதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    இதனையடுத்து இன்று காலை மண்டப அர்ச்சனை, லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை, திரவிய ஹோமம், பூர்ணாஹீதி கலச புறப்பாடு போன்ற பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் தாரை தப்பட்டை முழங்க அர்ச்சகர்கள் கோவில் கலசத்திற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றினர். இதில் தருமபுரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கோவில் அறங்காவலர் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • கும்பிஷேக விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பச்சைவீட்டு கொட்டாயில் பட்டாளம்மன், முத்தாலம்மன், கரிவேட்ட ராயசாமி கோவில், பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இக்கோவில் கும்பிஷேக விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

    தொடர்ந்து தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் பட்டாளம்மன், முத்தாலம்மன், கரிவேட்டராயசாமி கோவில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை அர்ச்சகர்கள் வெகுவிமர்சையாக நடத்தி வைத்தனர்.

    பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் பச்சைவீட்டுக்கொட்டாயில், தண்டுகாரம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • இருளப்பட்டி திருப்பாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
    • ஞாயிற்றுகிழமை மங்கள இசை முழங்க கலசப்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி திருப்பாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    விநாயகருக்கு சிறப்பு வழிபாடு மகா கணபதி சிறப்பு ஓமம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து காப்பு கட்டுதல் நடைபெற்றது.

    தொடர்ந்து நான்கு நாட்களாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று ஞாயிற்றுகிழமை மங்கள இசை முழங்க கலசப்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து கோபுரமுலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    இந்த நிகழ்சிக்கான ஏற்பாடுகளை அரியாஞ்செட்டி, சின்னாஞ்செட்டி, சஞ்சீவிசெட்டி, குண்டன்செட்டி, குருகன்செட்டி குடும்பத்தினர். திருவிழா குழுவினர் சீனு ரவி, தரணிதரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துயிருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கலச ஊர்வலம் நடைபெற்றது.

    வெற்றி தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீவாராஹி அம்மனுக்கு ஆலயம் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நாளை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் மாவட்டம் அகரம் கிராமம் சுக்காம்பட்டியில் வாஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெற்றி தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீவாராஹி அம்மனுக்கு ஆலயம் கட்டப்பட்டு இதன் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு இன்று காலை 2ம் கால யாகபூஜையும், மாலை 3ம் கால யாகபூஜை, யந்திர ஸ்தாபனம், ரக்ஷாபந்தனம் ஆகியவை நடைபெற்றது. நாளை காலை 4.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 4ம் கால யாகசாலை பூஜை, பூர்ணஹூதி மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் மஹா அபிஷேகம், குருநாதர் அருளாசி, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ சுக்காம்பட்டி சாமிகள், சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


    • கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், அபிஷேக தீர்த்தம் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.
    • மூலவர் விநாயகருக்கு பூஜைகள் செய்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. பின்னர், சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டியில் உள்ள ஸ்ரீ சாய் நகரில் புதிதாக வரசித்தி விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில், முருகன், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், சாய்பாபா மற்றும் நவக்கிரகங்கள் சன்னிதிகளும் கட்டப்பட்டுள்ளன.

    சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளுக்கு பின்னர், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், அபிஷேக தீர்த்தம் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவர் விநாயகருக்கு பூஜைகள் செய்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. பின்னர், சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா, மாநகராட்சி மண்டல காந்திமதி கண்ணன், மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மாலை 7 மணிக்கு வசந்த் விஜய்ஜி மகாராஜின் பாண்டுரங்க மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகில் உள்ள அக்ரஹாரம் சிவாஜிநகரில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா மற்றும் 87வது பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இவ்விழாவானது வருகிற ஜூலை மாதம் 5-ம் தேதி வரை நடைபெறும்.

    இந்த விழாவில், நேற்று காலை 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 7 மணிக்கு வசந்த் விஜய்ஜி மகாராஜின் பாண்டுரங்க மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.

    இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜையும், நாளை காலை ஜூலை 1-ம் தேதி ஸ்ரீவிட்டல் ரகுமாயி அம்பா பவானிக்கு அபிஷேக பூஜையும், 4-ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீருக்மணி திருக்கல்யாணமும், அன்னதானமும் நடக்க உள்ளது. தொடர்ந்து 5-ம் தேதி வரை தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். 

    • முதல் நாளான நேற்று மொன்னையன் கொட்டாய் கிராமத்து பொதுமக்கள் சாமிக்கு முளைப்பாரி, தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
    • கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனைகள் நடை பெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி அருகே எம்.கே.நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை தொடங்கியது.

    முதல் நாளான நேற்று மொன்னையன் கொட்டாய் கிராமத்து பொதுமக்கள் சாமிக்கு முளைப்பாரி, தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    இதனை தொடர்ந்து மாலை கணபதி பூஜை, லட்சுமி நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேச பலி, முதல் கால மகா பூஜைகள் பூர்ணாஹுதி பூஜைகளும் தீப ஆராதனைகளும் நடைபெற்றது.

    முக்கிய நாளான இன்று விடியற்காலை 4.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், காலை 7.30 மணி முதல் ஒன்பது மணி வரை மாரியம்மன் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனைகள் நடை பெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது மேலும் புதிதாக பிரதி ஷ்டை செய்யப்பட்ட மாரியம்ம னுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

    அதேபோல் விநாயகர் முருகர் நவகிரகங்கள் உள்ளிட்ட சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 112 உயரத்தில் புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம், அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது.
    • ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரம் மீது பூக்கள் தூவப்பட்டது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் மின் மோட்டார் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமரகதாம்பிகை சமேத சந்திரகுடேஸ்வர சாமி மலைக்கோவிலில், சுமார் 7 கோடி செலவில் 112 உயரத்தில் புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம், அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது.

    விழா நிகழ்ச்சிகள் கடந்த திங்கட்கிழமை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணா ஹுதி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

    தொடர்ந்து செவ்வாய்க் கிழமை அன்று விஷேச சாந்தி, இரண்டாம் கால பூஜை விஷேச திரவிய ஹோமம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மாலையில், புதிய கலச ஸ்தாபனம், 3- ஆம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், நாடி சந்தானம் பூர்ணாஹூதி மற்றும் பல்வேறு சிறப்ப பூஜைகள் நடைபெற்றது.

    சிறப்பு பூஜைகளை, மலைக்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வர குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தினர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும், ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரம் மீது பூக்கள் தூவப்பட்டது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் மின் மோட்டார் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, செங்கோல் ஆதினம் மற்றும் டாக்டர் செல்லகுமார் எம்.பி, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி, தாசில்தார் சுப்பிரமணி, ஓசூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினரும், அ.தி.மு.க. தெற்கு பகுதி செயலாளருமான பி.ஆர்.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும், முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, விழா நடைபெற்ற 3 நாட்களும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை, கமிட்டி நிர்வாகி கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர். கும்பாபிஷேக விழாவை யொட்டி ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.
    • சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே இ.கே.புதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், மாரியம்மன் கோவில், பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது,

    இக்கோவில் கும்பிஷேக விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

    கடந்த 27-ம் தேதி தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது, பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்கு விநாயகர், மாரியம்மன் கோவில் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை புரோகிதர்கள் நடத்தி வைத்தனர்.

    பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் இ.கே.புதூர், இண்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஏரியில் புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • சேலத்து மாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நேதாஜி சாலையில் உள்ள ஸ்ரீ சேலத்து மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீ எல்லம்மா தேவி கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி மகாகும்பாபிஷேக பிரதிஷ்டை விழா கடந்த 23ம் தேதி துவங்கியது தொடர்ந்து கோயிலில் தினம்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கடந்த வெள்ளிக்கிழமை மேள தாளங்கள் முழங்க நகரின் முக்கிய சாலைகளின் வழியாக பக்தர்கள் ஆடி, பாடி ஊர்வலமாக சென்று தேவராஜன் ஏரியில் புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    இதையடுத்து சேலத்து மாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலை விநாயகர் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து கணபதி ஹோமம் நவக்கிரஹ யாகபூஜை நடைபெற்றது. மதியம் அஷ்டபந்தனம் நடைபெற்றது. இரவு மகா மாரியம்மன் விமான கலசம் ஸ்தாபிதம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது.

    அதனை தொடர்ந்து மாரியம்மன் சிலை பீடத்தில் நிலை நிறுத்தல், எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், இரவு 3-ம் கால யாக பூஜையும் நடந்தது.

    நேற்று காலை யாகசாலைபூஜையும், தொடர்ந்து யாத்ரா தானம் நடந்தது. இதையடுத்து புனித தீர்த்த கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாரியம்மன் எல்லம்மா தேவி ஆகிய தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் குழுவினர் செய்திருந்திருந்தனர்.

    • தாரை தப்பட்டை முழங்க தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து க்கொண்டு ஊர்வலமாக பெரியாண்டவர் கோவிலை வந்தடைந்தனர்.
    • இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த செக்கோடி கிராமத்தில் பெரியாண்டவர் சாமி மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை பெரிய வீட்டுக்காரர்கள் அழைப்புடன் விநாயகர் வழிபாடு, புண்யாக வாசம், கணபதி ஓமம், நவகிரக ஹோமம், பூர்ணஹுதி மற்றும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதலுடன் கொடி ஏற்று விழா தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தீர்த்த குட ஊர்வலம் நடை பெற்றது.

    இந்த தீர்க்க கூட ஊர்வலத்தில் செக்கோடி, கடுக்காய் பட்டி, பாடி, பச்சினம்பட்டி, பழைய பாப்பார ப்பட்டி, வகுத்தப்பட்டி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பெரிய வீட்டுக்காரர் கோம்பு வகையாறாக்கள் பம்பை மற்றும் தாரை தப்பட்டை முழங்க தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து க்கொண்டு ஊர்வலமாக பெரியாண்டவர் கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் பெரியாண்ட வர் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ×