search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Kumbabhishek ceremony"

    வெற்றி தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீவாராஹி அம்மனுக்கு ஆலயம் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நாளை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் மாவட்டம் அகரம் கிராமம் சுக்காம்பட்டியில் வாஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெற்றி தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீவாராஹி அம்மனுக்கு ஆலயம் கட்டப்பட்டு இதன் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு இன்று காலை 2ம் கால யாகபூஜையும், மாலை 3ம் கால யாகபூஜை, யந்திர ஸ்தாபனம், ரக்ஷாபந்தனம் ஆகியவை நடைபெற்றது. நாளை காலை 4.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 4ம் கால யாகசாலை பூஜை, பூர்ணஹூதி மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் மஹா அபிஷேகம், குருநாதர் அருளாசி, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ சுக்காம்பட்டி சாமிகள், சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


    • ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை 6 மணிக்கு நடந்தது.
    • இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 30-ந் தேதி தொடங்கின.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் செல்வ விநாயகர், கல்யாண விநாயகர், செந்தூர் வேலன், ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை 6 மணிக்கு நடந்தது. இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 30-ந் தேதி தொடங்கின.

    தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ரக்ஷா பந்தன், கும்பஸ்தாபனம், யாக சாலை பிரவேசம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன.

    நேற்று விசேஷ சாந்தி, 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜையும் நடந்தது. 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு செல்வ விநாயகர், எல்லை மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை 7 மணிக்கு தேச மங்கையர்க்கரசி ஆன்மீக சொற்பொழிவு நாளை(செவ்வாய்க்கி ழமை) இரவு 7 மணிக்கு செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அவினாசி கவுண்டன் பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக பக்த ர்கள் முளைப்பாரி மற்றும் தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து மாலை விநாயகர் பூஜை, புண்யகம், வாஸ்து சாந்தி, அங்குூரார்பணம், ரக்ஷா பந்தனன் மற்றும் கும்ப அலங்காரம் செய்யப்பட்டு, முதல் காலையாக பூஜை, உபச்சார வழிபாடு மற்றும் திருமுறை பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாரா தனை நடைபெற்றது.

    தொடர்ந்து அஷ்ட பந்தனம் மருந்து சாற்றுதல் நடை பெற்றது. விழாவையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜை, 2-ம் கால யாக பூஜை மகா தீபாரதனையும் நடை பெற்றது.

    இதை தொடர்ந்து விநாயகர், செல்வநாயகி அம்மன் கோபுர கலசம், மூலவர் செல்வநாயகி அம்மன், கருப்பராயர், கன்னிமார், மாயவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகம் நடை பெற்றது.

    அதை தொடர்ந்து தச தரிசனம், தசதானம், மகா அபிஷேகமும் நடைபெற்று பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவில் கவுந்தப்பாடி, அவினாசி கவுண்டன் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தார்கள்.

    ×