என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றிய காட்சி.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- முதல் நாளான நேற்று மொன்னையன் கொட்டாய் கிராமத்து பொதுமக்கள் சாமிக்கு முளைப்பாரி, தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
- கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனைகள் நடை பெற்றது.
தருமபுரி,
தருமபுரி அருகே எம்.கே.நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை தொடங்கியது.
முதல் நாளான நேற்று மொன்னையன் கொட்டாய் கிராமத்து பொதுமக்கள் சாமிக்கு முளைப்பாரி, தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இதனை தொடர்ந்து மாலை கணபதி பூஜை, லட்சுமி நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேச பலி, முதல் கால மகா பூஜைகள் பூர்ணாஹுதி பூஜைகளும் தீப ஆராதனைகளும் நடைபெற்றது.
முக்கிய நாளான இன்று விடியற்காலை 4.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், காலை 7.30 மணி முதல் ஒன்பது மணி வரை மாரியம்மன் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனைகள் நடை பெற்றது.
இதனை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது மேலும் புதிதாக பிரதி ஷ்டை செய்யப்பட்ட மாரியம்ம னுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.
அதேபோல் விநாயகர் முருகர் நவகிரகங்கள் உள்ளிட்ட சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






