என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபுர கலசங்களுக்கு புரோகிதர்கள் புனிதநீரை ஊற்றிய காட்சி.
விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.
- சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே இ.கே.புதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், மாரியம்மன் கோவில், பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது,
இக்கோவில் கும்பிஷேக விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.
கடந்த 27-ம் தேதி தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது, பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்கு விநாயகர், மாரியம்மன் கோவில் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை புரோகிதர்கள் நடத்தி வைத்தனர்.
பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் இ.கே.புதூர், இண்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.






