search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா
    X

    ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரம் மீது பூக்கள் தூவப்பட்ட காட்சி.

    ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா

    • 112 உயரத்தில் புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம், அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது.
    • ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரம் மீது பூக்கள் தூவப்பட்டது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் மின் மோட்டார் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமரகதாம்பிகை சமேத சந்திரகுடேஸ்வர சாமி மலைக்கோவிலில், சுமார் 7 கோடி செலவில் 112 உயரத்தில் புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம், அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது.

    விழா நிகழ்ச்சிகள் கடந்த திங்கட்கிழமை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணா ஹுதி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

    தொடர்ந்து செவ்வாய்க் கிழமை அன்று விஷேச சாந்தி, இரண்டாம் கால பூஜை விஷேச திரவிய ஹோமம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மாலையில், புதிய கலச ஸ்தாபனம், 3- ஆம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், நாடி சந்தானம் பூர்ணாஹூதி மற்றும் பல்வேறு சிறப்ப பூஜைகள் நடைபெற்றது.

    சிறப்பு பூஜைகளை, மலைக்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வர குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தினர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும், ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரம் மீது பூக்கள் தூவப்பட்டது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் மின் மோட்டார் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, செங்கோல் ஆதினம் மற்றும் டாக்டர் செல்லகுமார் எம்.பி, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி, தாசில்தார் சுப்பிரமணி, ஓசூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினரும், அ.தி.மு.க. தெற்கு பகுதி செயலாளருமான பி.ஆர்.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும், முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, விழா நடைபெற்ற 3 நாட்களும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை, கமிட்டி நிர்வாகி கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர். கும்பாபிஷேக விழாவை யொட்டி ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    Next Story
    ×