என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாண்டுரங்க ருக்மணி சாமி கோவில் கும்பாபிஷேக விழா
- மாலை 7 மணிக்கு வசந்த் விஜய்ஜி மகாராஜின் பாண்டுரங்க மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகில் உள்ள அக்ரஹாரம் சிவாஜிநகரில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா மற்றும் 87வது பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இவ்விழாவானது வருகிற ஜூலை மாதம் 5-ம் தேதி வரை நடைபெறும்.
இந்த விழாவில், நேற்று காலை 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 7 மணிக்கு வசந்த் விஜய்ஜி மகாராஜின் பாண்டுரங்க மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜையும், நாளை காலை ஜூலை 1-ம் தேதி ஸ்ரீவிட்டல் ரகுமாயி அம்பா பவானிக்கு அபிஷேக பூஜையும், 4-ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீருக்மணி திருக்கல்யாணமும், அன்னதானமும் நடக்க உள்ளது. தொடர்ந்து 5-ம் தேதி வரை தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.






