search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்துச்சண்டை"

    • ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர்.
    • ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியானது.

    குத்து சண்டையில் இந்தியா சார்பில் 5 வீரர்கள், 5 வீராங்கனைகள் ஆக மொத்தம் 10 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர்.

    நேற்று நடந்த கால் இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றி பெற்றனர். இதனால் குத்து சண்டையில் 3 பதக்கம் உறுதியானது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன் கால் இறுதியில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ஹெலன் ஜோன்சை எதிர் கொண்டார்.

    இதில் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் அவர் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டப்லேயை 6-ந்தேதி சந்திக்கிறார்.

    இதே போல 48 கிலோ பிரிவில் வீராங்கனை நித்து, 57 கிலோ பிரிவில் வீரர் ஹூசைன் ஆகியோரும் கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 70 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் கால் இறுதியில் 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ரோசியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தார்.

    • ஆண்களுக்கு 13 எடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடைப்பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
    • 33 மாநிலங்களை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் ஆதரவுடன் 5-வது தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள் விளையாட்டு அரங்கில் வருகிற 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடக்கிறது.

    ஆண்களுக்கு 13 எடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடைப்பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 33 மாநிலங்களை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க செயலாளர் (பொறுப்பு) எம்.எஸ். நாகராஜன் இன்று அறிவித்துள்ளார். அதன் விபரம்:-

    ஆண்கள்: யுவேஸ்வரன் (மினிமம் வெயிட் 46-48 உடல் எடை) நவீன் குமார் (பாந்தம் வெயிட்), திருநாவுக் கரசு (லைட் வெயிட்), சுபாஷ் வசந்த் (லைட் வெல்டர்), டில்லி பாபு (வெல்டர் வெயிட்), கபிலன் (லைட் மிடில்), பூபாலன் (மிடில் வெயிட்), லோஷன் (கிரைசர் வெயிட்-அனை வரும் சென்னை), விஷ்வா ஜித் (பிளை வெயிட்-கோவை), காவியன் (பெதர் வெயிட்), தியாகராஜன் (லைட் ஹெவி வெயிட்) சாம்பால்ராஜ் (சூப்பர் ஹெவி வெயிட்-மூவரும் திருவள்ளூர்), ஸ்ரீவெங்கடேஷ் (ஹெவி வெயிட்-கடலூர்)

    பெண்கள்: லோஷினி (மினிமம் வெயிட்), எச். மதுமிதா (பாந்தம் வெயிட்), ஸ்ரீநிதி (லைட் மிடில்-சென்னை), பூவிதா (பிளை வெயிட்) ஜீவா (பெதர் வெயிட்) மாலதி (லைட் வெல்டர்-புதுக் கோட்டை), சினேகா (லைட் வெயிட்-திருச்சி), அனுசுயா (வெல்டர் வெயிட்-காஞ்சீ புரம்), எம்.மதுமிதா (மிடில் வெயிட்), ஜெயஸ்ரீ (லைட் ஹெவி), அபினயா சரஸ்வதி (கிரைசர் வெயிட்-திருவள்ளூர்), பிரிஸ்கிலா (ஹெவி வெயிட்-கன்னியா குமரி)

    • புதுக்கோட்டை மாவட்ட அணி சாம்பியன்
    • இந்தப்போட்டியில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 70 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில அளவிலான இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே உள்ள நான்கு வழிச்சாலை மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இந்தப்போட்டியில் கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 70 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியை கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டம் சாம்பியன் பட்டம் பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் 2-ம் இடம் பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு குத்துச்சண்டை கழக செயலர் எம்.எஸ்.நாகராஜன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் பாக்கியமணி முன்னிலை வகித்தார். மாநில தொழில் நுட்பக் குழுத் தலைவர் டி.என்.செழியன் வரவேற்று பேசினார்.

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் சரிகா, புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வர் ஜின்ஸ் ஜோசப் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். முடிவில் குமரி மாவட்ட குத்துச்சண்டை கழக செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.

    இந்தப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனைகள் வருகிற ஜூலை 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடைபெறும் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    • இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்ய டெல்லியில் தகுதிச்சுற்று போட்டி நடக்கிறது
    • காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.

    புதுடெல்லி:

    பயிற்சி போட்டியில் இருந்து விலகியதன் மூலம் காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அடுத்த மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் மற்றும் பல்வேறு நட்சத்திர வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

    இதில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் மேரி கோம், அரியானாவின் நிதுவை சந்தித்தார். முதல் ரவுண்டில் 39 வயதான மேரிகோம் எதிராளிக்கு குத்துவிட முயற்சித்த போது, நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு இடது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டியை நடுவர் நிறுத்தினார். உடனடியாக மேரிகோம் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். 

    மேரி கோம் போட்டியில் இருந்து பாதியில் விலகியதால், அவரை எதிர்த்து மோதிய நிது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். எனவே, இந்த முறை காமன்வெல்த் போட்டிக்கு மேரி கோம் செல்ல முடியாது.

    சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் வெளியிட்டுள்ள தரவரிசையில் மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். #AIBA #MaryKom
    இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்பவர் மேரி கோம். 36 வயதாகும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. என்றாலும், அபாரமாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்தார்.

    சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் இன்று குத்துச்சண்டை உலகத் தரவரிசையை வெளியிட்டது. இதில் 45 முதல் 48 கிலோ லைட் பிளை பிரிவில் இடம்பிடித்துள்ள மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற பயிற்சி முகாமின்போது மேரி கோமுடன் விளையாட்டுத்துறை மந்திரி ரத்தோர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. #WomenWorldChampionship #MaryKom #RajyavardhanSinghRathore #SportsMinister
    புதுடெல்லி:

    சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சார்பில் டெல்லியில் வரும் 15-ம்தேதி முதல் 24-ம் தேதி வரை பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது. இதில் 70 நாடுகளில் இருந்து சுமார் 300 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனைகள், உலக மற்றும் ஐரோப்பிய சாம்பியன்கள் என முன்னணி விராங்கனைகள் 10  பிரிவுகளில் மோத உள்ளனர். 

    இப்போட்டியில் இந்தியா சார்பில் மேரிகோம் (48 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), பிங்கி ஜங்ரா (51 கிலோ), சீமா பூனியா (81+ கிலோ) உள்ளிட்ட 10 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்கள் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இன்று இந்திரா காந்தி ஸ்டேடியத்திற்கு சென்று பயிற்சி பெறும் குத்துச்சண்டை வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார். மேலும், குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோமுடன் குத்துச்சண்டை போட்டார். நட்புரீதியான இந்த போட்டி சிறிது நேரம் நடந்தது. 

    ரத்தோரை நோக்கி மேரி கோம் குத்து விடுவதும், ஆலோசனை வழங்குவதும் என போட்டி சுவாரஸ்யமாக சென்றது. ரத்தோரும், மேரி கோமின் தாக்குதலை தடுத்து, கைத்தட்டல் பெறுகிறார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முன்னாள் வீரரான ரத்தோர், ஸ்டேடியத்திற்கு வந்து கலந்துரையாடியது, வீராங்கனைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    விளையாட்டுத்துறை மந்திரி தன்னுடன் குத்துச்சண்டை போடும்போடு எடுத்த வீடியோவை மேரி கோம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த  வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. #WomenWorldChampionship #MaryKom #RajyavardhanSinghRathore #SportsMinister
    ×