search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில பெண்கள் குத்துச்சண்டை
    X

    மாநில பெண்கள் குத்துச்சண்டை

    • புதுக்கோட்டை மாவட்ட அணி சாம்பியன்
    • இந்தப்போட்டியில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 70 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில அளவிலான இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே உள்ள நான்கு வழிச்சாலை மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இந்தப்போட்டியில் கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 70 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியை கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டம் சாம்பியன் பட்டம் பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் 2-ம் இடம் பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு குத்துச்சண்டை கழக செயலர் எம்.எஸ்.நாகராஜன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் பாக்கியமணி முன்னிலை வகித்தார். மாநில தொழில் நுட்பக் குழுத் தலைவர் டி.என்.செழியன் வரவேற்று பேசினார்.

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் சரிகா, புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வர் ஜின்ஸ் ஜோசப் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். முடிவில் குமரி மாவட்ட குத்துச்சண்டை கழக செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.

    இந்தப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனைகள் வருகிற ஜூலை 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடைபெறும் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    Next Story
    ×