search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குணால் கோஷ்"

    • மம்தா பேசியது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    • திரிணாமுல் காங்கிரஸ் எனது தொகுதியில் போட்டியிட்டாலும் எனக்கு கவலை இல்லை.

    கொல்கத்தா:

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பேச்சு வார்த்தையின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் முர்ஷிதா பாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசும் போது, மாவட்டத்தில் மட்டுமல்ல 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட தயாராக உள்ளது என்றார். அவரது இந்த பேச்சு இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பா.ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.


    முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஹரங்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என மம்தா பேசியது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் எனது தொகுதியில் போட்டியிட்டாலும் எனக்கு கவலை இல்லை. எங்கள் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேசி இருக்கிறார்கள்.

    நான் இந்த நிலைக்கு எளிதாக வந்துவிடவில்லை. பல்வேறு சவால்களை எதிர்கொண்டும், தேர்தலில் வெற்றி பெற்றே வந்துள்ளேன். எப்படி போட்டியிடுவது, எப்படி வெற்றி பெறுவது என்பது எனக்கு தெரியும் என்றார்.

    • காங்கிரஸ்க்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திரிணாமுல் காங்கிரஸ் பிடிவாதம்.
    • தனித்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் யோசித்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. பா.ஜனதாவை எதிர்த்து களம் இறங்க இந்தியா கூட்டாணி உருவாகியுள்ளது. இதில் 26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ்க்கு இரண்டு இடங்கள்தான் தர முடியும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் விரக்தியடைந்துள்ளனர். தனியாக நிற்கவும் தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் குணால் கோஷ் கூறியதாவது:-

    கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் மீது காங்கிரஸ் மாநில அமைப்பு தாக்குதல் நடத்துகிறது. அதேவேளையில் பா.ஜனதாவுக்கு ஆக்சிஜன் கொடுத்து வருகிறது. இது வேலை செய்யாது. நாங்கள் அனைத்து இடங்களிலும், அதாவது 42 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம்.

    தொகுதி பங்கீட்டின்போது காங்கிரஸ் கள நிலவரும் என்ன? என்பதை ஆராய்ந்து பேச வேண்டும். அவர்கள் அரசியல் நெருக்கடியை செய்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜி இறுதி முடிவு எடுப்பார்.

    இவ்வாறு குணால் கோஷ் தெரிவித்தார்.

    அதற்கு பதிலடியாக எம்.பி.யும், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

    எனக்கு யாரையும் பற்றி கவலையில்லை. எங்களுடைய தலைவர்கள் ஏற்கனவே பேசிவிட்டார்கள். நான் இங்கு போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக வந்துள்ளேன். போட்டியிட்டு வெற்றி பெற எங்களுக்குத் தெரியும்.

    இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    ×