search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்தவர்"

    • மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினர் ஜெப நடைபயணம் மேற்கொண்டனர்.
    • தஞ்சை மாவட்டத்தில் மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.

    தஞ்சாவூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நீடித்து வருகிறது.

    இதனால் அம்மாநில பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று தஞ்சை மிஷனரி தெருவில் அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி ஜெப நடை பயணம் நடந்தது.

    இதற்கு கூட்டமைப்பின் சேர்மன் பிஷப் மோகன்தாஸ் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் கூறும் போது :-

    மணிப்பூர் மாநிலத்தில் அமைதியும், சமாதானமும் ஏற்பட வேண்டும். இயல்பு நிலை திரும்ப வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவ கூட்ட மைப்பு சார்பில் ஜெப நடை பயணம் மேற்கொண்டோம்.

    மேலும் தஞ்சை மாவட்ட த்தில் கிறிஸ்துவ பணி மேற்கொண்ட மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.

    இந்த ஜெப நடை பயணத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர் .

    • சவேரியார் ஆலயத்தில் நடந்த சாம்பல் புதன் திருப்பலியில் பிஷப் நசரேன் சூசை பங்கேற்பு
    • மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சிஎஸ்ஐ ஆலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    நாகர்கோவில்:

    கிறிஸ்தவர்களின் கடவு ளாக வழிபடும் இயேசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு சிலுவையில் அறை யுண்டு மறைந்தார்.

    இதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து வறியவர்களுக்கு உதவி கள் செய்வது வழக்கம். இந்த நாளை அவர்கள் ஆண்டு தோறும் தவக்காலமாக கடைப்பிடித்து வருகி றார்கள். தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும்.

    இன்று கிறிஸ்தவ ஆலயங்க ளில் சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாட்டையொட்டி ஏராளமானோர் பங்கேற்ற னர்.

    கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நெற்றியில் சாம்பலால் சிலுவை குறியீடு செய்தார். கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் ராஜ், பொருளாளர் அலோசி யஸ் பென்சிகர், ஆயரின் செயலாளர் சகாய ஆண்டனி, கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் சகாய ஆனந்த், ஆலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய செல்வன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

    இதே போல் கன்னியா குமரி புனித அலங்கார உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், நாகர்கோவில் அசிசி ஆலயம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று சாம்பல் புதன் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பாதிரியார்கள் சாம்பல் மூலமாக நெற்றியில் சிலுவை குறியீடு செய்தனர். சாம்பல் புதன் நிகழ்ச்சியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சிஎஸ்ஐ ஆலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    • போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
    • சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கலெக்டரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. சபை போதகர். இவர் அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியார்பாளையம் பகுதியில் இடம் வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியபோது, ஒருசிலர் சபை கட்டுமான பணி நடந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

    இதுதொடர்பாக போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்டரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார். இந்த நிலையில் சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்தும், கிறிஸ்தவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் செயல்களை கண்டித்தும் பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோரும், அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×