search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருததாரை"

    • சிவலிங்கத்தை பூஜை செய்வதற்கு உரிய ஆதார நியமங்கள் முறைகளைக் கூறுவதே சிவாகமம்.
    • பசு, பதி, பாசம் ஆகிய முப்பொருட்களைக் கூறுவதே ஆகமம் என்று சைவ மறையவர் பொருள் கொள்வர்.

    சிவாகமப் பொருள் அறிவோம்

    சிவலிங்கத்தை பூஜை செய்வதற்கு உரிய ஆதார நியமங்கள் முறைகளைக் கூறுவதே சிவாகமம்.

    இருபத்தெட்டு வகைகளாக உலகிற்கு அளித்தவர்கள் ஐந்து முனிவர்களான கவுசிகர், காசிபர், பரத்வாஜர், கவுதமர் ஆகியோர் இவர்கள் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களான,

    ஈசானம் தத்புருஷம், கோரம், வாமதேவம், சத்யா ஜாதம் என்ற ஒவ்வொரு திருமுகங்கள் வழியாகக் கேட்டறிந்து,

    காமிகம் முதல் வாதுளம் வரை ப்ரணவர், சுதாக்யர், சுதீர்த்தர், காரணர், சுசிவர், ஈசன்குக்குமர், காலர், அம்பி, தேசிகர் ஆகியோர் மூலம் பரவியது.

    ஆகமம் என்பதற்கு சிவபெருமானை பூஜை செய்கிற விதிகள் சிவபோதனை நூல்கள் எனினும் சைவர்கள் இதை ஆ-சிவஞானம் க-மோட்சம், ம-மலநாசம் என்றும் கூறுகின்றனர்.

    மேலும் பசு, பதி, பாசம் ஆகிய முப் பொருட்களைக் கூறுவதே ஆகமம் என்று சைவ மறையவர் பொருள் கொள்வர்.

    சிவாகமத்தை விவரிக்கும் ஆகம விதி நூல்களில் ஒன்றான 28வது வாதுன ஆகமத்தில் சொல்லப்பட்ட உண்மையான பொருள் இதுவே.

    ஆகமம் என்ற சொற்கோர்வையின் பொருள்

    ஆ&ஆகதம் சிவபத்ராஸ்ச & சிவபெருமானின் வாக்கிலிருந்து வந்தது.

    க&கதம்து கிரிஜா சுகதென & கிரிஜா என்ற பார்வதி தேவிக்கு உபதேசிக்கப்பட்டது.

    ம&மதஞ்ச வாசுதேவஸ்ச & வாசுதேவன் என்ற மகா விஷ்ணு இது தன்னுடைய மதம் என்று ஏற்றுக் கொண்டது.

    தஸ்மாத் ஆக & ஈரித:& இம்மூன்று முதல் எழுத்துக்களும்உணர்த்தும் பொருளே சிவாகமம் ஆகிறது.

    28 ஆகமங்களில் முதல் 10 சிவபேதம் என்றும் மற்ற 18&ம் ருத்ரபேதம் என்றும் வகைப்படுத்தப்பட்டு அவற்றில் சிவாகம ரகசியங்கள் அடங்கி உள்ளன.

    28 வகை ஆகமங்களாவன:

    காமிகம், யோகஜம், சிந்தயம், காரணம் அஜிதம், தீப்தம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதகம், விஜயம், தைவ நிஸ்வாசம், ஸ்வயம்புவம், அத்நலம், வீரம், ரவுரவம், மகுடம், விமலம் சந்திரக்ஞானம், பிம்பம், ப்ரோத்ஹீதம், லலிகம், சித்தம், சந்தானம் சர்வோக்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம்.

    • பிலிப்பைன்ஸ் நகர மக்கள் சிவபெருமானை சிவப்பன் என்று வணங்கி வருகின்றனர்.
    • பாலித்தீவுகள், இலங்கை, இந்தோனேசியா எங்கிலும் சைவ வழிபாட்டை காண முடிகிறது.

    உலகெங்கும் ஈஸ்வர தத்துவம்

    விளையாட்டாய் சிவலிங்கத்தின் மீது ஒரு வில்வ தனத்தை போட்டால் கூட அருள் தந்து விடுவார் ஈசன் என்ற அவரது பெருமைப்பற்றி விளக்கினார் வடமொழிக் கவியாம் நீலகண்ட தீட்சிதர்.

    வரலாற்று அறிஞரான சர்ஜான் மார்ஷல் தனது நூலில் சிந்து சமவெளி எங்கிலும் சிவக்குறிப்புகள் உள்ளதாகவும் தற்போதுள்ள மத வழிபாட்டுக் குறிப்புகளே அச்சமயத்திலும் கடை பிடிக்கப்பட்டன என்கிறார்.

    "எணான்" என்னும் கடவுள் எண் குணம் கொண்ட சிவன் தான் என்று உறுதிபடக் கூறுவார் ஈராஸ் பாதிரியார்.

    அமெரிக்காவில் கொலராடோ ஆற்றுக்கரையில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவலாயம் இருந்ததாக தொல்லியர்கள் சொல்கின்றனர்.

    ஆசியாவில் சிவாஸ் என்ற நகரில் சிவ வழிபாடும் இருந்து வந்ததை அறிய முடிகிறது.

    பிலிப்பைன்ஸ் நகர மக்கள் சிவபெருமானை சிவப்பன் என்று வணங்கி வருகின்றனர்.

    ஜப்பானியர்களது புராதனமான கடவுள் "சிவோ" என்று அவர்களின் ஏடுகளில் தகவல் உள்ளது.

    பாபிலோனியர்களது செப்பேடுகளில் சிவன் என்ற வார்த்தை ஒரு மாதத்தினுடைய பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அக்கேடியாவின் மக்கள் சிவன் ஒரு நட்சத்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.

    பின்லாந்து மக்கள் இந்த உலகத்தின் காவல் தெய்வம் சிவனே என்கின்றனர்.

    தொல்லியல் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கொரியாவில் தெருவுக்கு ஒரு சிவலிங்கம் இருந்துள்ளதை அறியலாம்.

    பாலித்தீவுகள், இலங்கை, இந்தோனேசியா எங்கிலும் சைவ வழிபாட்டை காண முடிகிறது.

    எகிப்து ஆற்றங்கரையில் ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    திபெத்தில் நாகரீகத்தில் சைவ வழிபாடு கி.பி. 5&ம் நூற்றாண்டிலேயே வேரூன்றியதை மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருபாவை, திரியம்பாவை, விழா, நடத்தியதால் அறிய முடிகிறது.

    சாகர் வம்சத்து அரசன் மோகன் என்பவன் தன் நாட்டு நாணயங்களில் நந்தி தேவர் சின்னங்களைப் பொறித்ததாக செய்தி உண்டு.

    சுவேதாஸ்வர உபநிடதம். சுக்கில யஜீர் வேதமும் சிவ பூஜை சிறப்பை தெளிவாகக் கூறுகின்றன.

    கி.பி. 11&ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்து வந்த கண்டராதித்த சோழனின் மனைவி தன் கணவரையே அலங்கரித்து பரமேஸ்வரனாக வழிபட்டதாக பழயாறை & கல்வெட்டும் செய்தியில் இருக்கிறது.

    சயாம் நாட்டு மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகளில் பாலி எழுத்துகளில் எழுதிய திருவெம்பாவை படிக்கப்பட்டதை அறிகிறோம்.

    இவ்வாறு சிவலிங்கம் வழிபாடு உலகெங்கிலும் பரவி ஈஸ்வர தத்துவம் மக்களைக் காக்கும் என்று சொல்லி உள்ளதை பல்வேறு உலக ஏடுகளில் காணலாம்.

    சிவராத்திரியில் சூரியஓளி & சிவகங்கை மாவட்டம் பாரிமாமருதுபட்டியில் உள்ள வரியா மருந்தீசர் ஆலயத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் காலை மட்டும் இறைவன் மீது சூரிய ஒளி படுகிறது.

    • சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவகாலம் என அழைக்கப்படுகிறது.
    • சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும்.

    லிங்கோத்பவர் கால வழிபாடு

    திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி.

    அப்படி சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம் என்று அழைக்கப்படுகிறது.

    (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்)

    அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்த சிவன் கோவிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார்.

    சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.

    • தாரா அல்லது தாரா பூஜை என்பது பெரும்பாலும் சிவனுக்கு நடக்கும் ஒரு வழிபாடு.
    • பன்னிரு சிவாலயங்களிலும் கிருததாரை நடத்தப்பட்டு இருக்கிறது.

    சிவனுக்கு உரிய தாரா பூஜை

    மேற்குக் கடற்கரை ஓரத்தில் உள்ள எல்லா சிவாலயங்களிலும் நடைபெறுகிற ஒரு சடங்கு தாரா பூஜை.

    தாரா அல்லது தாரா பூஜை என்பது பெரும்பாலும் சிவனுக்கு நடக்கும் ஒரு வழிபாடு.

    வட்ட வடிவம் கொண்ட செப்புப் பாத்திரத்தின் நடுவில் ஒரு சிறிய துவாரம் இருக்கும்.

    அதன் வழியாக ஒரு தர்ப்பைப் புல்லை செருகி நீர், பால் அல்லது நெய்யை சீரான சிறு துளிகளாக இறைவனது தலையில் விழுமாறு வைத்திருப்பர்.

    வட்டப் பாத்திரத்தை உயரமான ஒரு தாங்கலில் நிறுத்தியிருப்பர்.

    இவ்வழிபாட்டிற்கு கிருத தாரை என்று பெயர்.

    நெய் மூலம் தாரை நடத்தினால் அதற்கு வடமொழியில் கிருததாரை என்றும், பால் மூலம் தாரை நடத்தினால் ஷீரதாரை என்றும், தண்ணீர் மூலம் தாரை நடத்தினால் ஜலதாரை என்றும் பெயர்.

    பன்னிரு சிவாலயங்களிலும் அன்றைய திருவிதாங்கூர் அரசர்களால் கிருததாரை நடத்தப்பட்டு இருக்கிறது.

    அதற்குரிய நெய்யின் அளவு திருவிதாங்கூர் அறநிலையத்துறை அறிக்கையில் உள்ளது.

    ஒவ்வொரு சிவாலயங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் கிருததாரை நடைபெறும்.

    பன்னிரண்டாவது வருடம் எல்லா சிவாலயங்களிலும் மொத்தமாக நடைபெறும் கிருததாரைக்கு கூட்ட கிருததாரை என்று பெயர்

    ×