search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் மாளிகை"

    • நவராத்திரி கொலுவைப் பார்வையிட 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    • பொதுமக்களின் பார்வைக்கு கவர்னர் மாளிகை விரைவில் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லம், கவர்னர் மாளிகை அலுவலகங்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குடியிருப்புகள் உள்ளன.

    தங்குமிடங்கள், கவர்னரின் செயலகம் ஆகியவை சமகால பயன்பாட்டுக்காக புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டிடங்கள் ஆகும். கவர்னர் செயலகத்தின் அன்றாட அச்சுத்தேவைகளை நிறைவு செய்யும் பாரம்பரிய நினைவுச் சின்னமாக கவர்னர் மாளிகையிலுள்ள அச்சகம் செயல்படுகிறது.

    இருபத்தைந்தாண்டு நினைவு பூந்தோட்டம், நீள் உருண்டை வடிவிலான பூந்தோட்டம் மற்றும் மூலிகைத் தோட்டம் போன்ற ஏராளமான அலங்கார தோட்டங்கள் கவர்னர் மாளிகை வளாகத்தை அலங்கரிக்கின்றன.

    கவர்னர் மாளிகையின் நுழைவுவாயில் அருகே நீரூற்றுகள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட சுவர்களைக்கொண்ட அலங்காரத் தோட்டம், கிண்டி தேசிய பூங்காவில் உள்ள அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை சித்தரிக்கிறது.

    மேலும். 'பழைய மெட்ராசின்' ஒருங்கிணைந்த பண்பாடு மற்றும் கட்டிடக்கலை சிறப்புகளின் கம்பீரமான தோற்றத்தை தொடர்ச்சியாக காண்பிக்கும் கலைச்சின்னமாக விளங்குகிறது.

    கவர்னர் மாளிகையைப் பொருத்தவரை மிகவும் பாதுகாப்பான பகுதி என்பதால் பொதுமக்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில், முதல்முறையாக கவர்னர் மாளிகையில் நவராத்திரியை முன்னிட்டு கொலு கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியை கவர்னர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி ரவி ஆகியோர் கடந்த கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி திறந்து வைத்தனர். நவராத்திரி கொலுவானது பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றது.

    மேலும், நவராத்திரி கொலுவைப் பார்வையிட 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    கவர்னர் மாளிகை வரலாற்றில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு பொதுமக்கள் மாளிகையாக இந்த மாளிகை மாறியது இதுவே முதல் முறையாகும்.

    கவர்னர் மாளிகையில் மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு ஆகஸ்டு 15-ந் தேதி பரிசுகள் வழங்கப்பட்டன.

    சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆர்வலர்களையும், சமுதாயப் பணியில் சிறந்து விளங்குபவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவியால் முதல் முறையாக பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதேபோல பொதுமக்களின் பார்வைக்கு கவர்னர் மாளிகை விரைவில் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான ஆயத்தப் பணியை கவர்னர் மாளிகை மேற்கொண்டு வருகிறது.

    • முதன்முறையாக கவர்னர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு’ ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியக் குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் கவர்னரின் மனைவி லட்சுமி ரவி ஆகியோரால் கடந்த 26-ந் தேதி அன்று திறந்து வைக்கப்பட்ட 'நவராத்திரி கொலு', பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

    பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, கவர்னர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள 'நவராத்திரி கொலு', தற்போது 5-ந் தேதி வரை நாள்தோறும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் உட்பட பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.

    விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாளச்சான்று மற்றும் பார்வையிடும் நாள் ஆகியவற்றை navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, அதனை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    முதன்முறையாக, தற்போது கவர்னர் மாளிகையில் 'நவராத்திரி கொலு' ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்கள் முதலில் பார்வையிடலாம்' என்ற முன்னுரிமையின் அடிப்படையில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80 நபர்கள் வரை பார்வையிடலாம். பார்வையிடும் நேரம் 4 கட்டங்களாக ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு கட்டத்திற்கு 20 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் மின்னஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தங்களுக்கான ஒதுக்கீட்டு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, பார்வையாளர்கள் மின்னஞ்சலில் வழங்கிய அசல் அடையாளச் சான்றுடன் ஆளுநர் மாளிகையின் 2-வது நுழைவுவாயிலுக்கு வர வேண்டும்.

    இந்தியக் குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வெளிநாட்டினர் அவர்களின் அடையாளத்திற்காக நுழைவாயிலில் பாஸ்வேர்டை காண்பிக்க வேண்டும். இந்த அடையாளச்சான்று மின்னஞ்சலில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சான்றாக இருக்கவேண்டும். பார்வையாளர்கள் தனியாக அல்லது அதிகளவு 5 பேர் கொண்ட குழுவாக வரலாம். வளாகத்திற்குள் அலைபேசி மற்றும் புகைப்படக்கருவிகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    • rbvisit.rajbhavan-maharashtra.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
    • காலை 6 மணி முதல் 8.30 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது.

    மும்பை :

    மும்பை மலபார்ஹில் பகுதியில் மராட்டிய கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ்பவன் என்ற கவர்னர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையில் பருவமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 4 மாத பருவமழை முடிவுக்கு வருவதை தொடர்ந்து மீண்டும் கவர்னர் மாளிகைக்கு சுற்றுலா பயணிகளுக்கு வருகை தர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து கவர்னர் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

    பருவமழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டு உள்ளது. எனவே வருகிற 1-ந் தேதி முதல் பயணிகள் வருகை தரலாம்.

    கவர்னர் மாளிகையைில் சுற்றுலா செல்ல விரும்புவர்கள் rbvisit.rajbhavan-maharashtra.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். வாரத்தின் திங்கட்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதைத்தவிர தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்ததேதி வரை கவர்னர் மாளிகைக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளதால் அன்றைய தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

    கவர்னர் மாளிகையில் சூரிய உதயம், தேவி கோவில், பதுங்கு குழிகள், புரட்சியாளர்களின் கேலரி, தர்பார் அரங்கு, ஜல் விகார் மற்றும் மராட்டிய மாநிலத்தின் உருவாக்கத்தின் நினைவகம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை ராஜ்பவன் பணியாளர்களுக்காக காலை முதல் இரவு வரை இயங்கும் முழுநேர மலிவுவிலை உனவகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திறந்து வைத்தார். #RajBhavan #BanwarilalProhit
    சென்னை:

    தமிழக கவர்னர் மாளிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பயன்படும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயங்கும் மலிவு விலை உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திறந்து வைத்தார்.

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக தயாரிக்கப்படும் உணவு வகைகள் லாப நோக்கம் இல்லாமல், குறைந்த விலையில் ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×