search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைப்புலி தாணு"

    • 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.
    • `சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து திரைக்கு கொண்டு வர ஏற்பாடு.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, பாபா, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுசின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில் விஜய்யின் கில்லி படமும் தமிழ்நாடு முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. வில்லு படமும் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில் விஜய் நடித்த `சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

    `சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய் ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார்.

    இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

    'சச்சின்' சிறந்த காதல் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அதிக நாட்கள் ஓடி நல்ல வசூல் பார்த்தது. அப்போது அப்படத்துடன் ரஜினியின் 'சந்திரமுகி' கமல்ஹாசனின் `மும்பை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தயாரிப்பாளர்கள் அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்ட பலரின் வீட்டில் சோதனை நடைப்பெற்றது.

    சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

     

    இந்நிலையில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர் கலைப்புலி தாணு.
    • இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

    1985-ஆம் ஆண்டு யார் என்ற படத்தின் முலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கலைப்புலி தாணு. அதன்பின் கிழக்கு சீமையிலே, விஐபி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆளவந்தான், காக்க காக்க, மாயாவி, சச்சின், தெறி, கபாலி, துப்பாக்கி, அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படங்களை தயாரித்து வருகிறார்.

    கலைப்புலி தாணு

    கலைப்புலி தாணு

     

    இந்நிலையில் சென்னை, தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்தில் இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் சில தயாரிப்பாளர்கள் பெயரும் வருமான வரித்துறை சோதனை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.

    பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    ×