search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் எச்சரிக்கை"

    • உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி சட்ட நடவடிக்கை
    • கூட்டுறவு கடன் சங்கங்களின் உரிமங்கள் ரத்து

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் உரங்களுடன் சேர்த்து பிற பொருள்களை கட்டாயப்படுத்தி விவசாயி களுக்கு வழங்கும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி சட்ட நடவடிக்கை தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலைப்பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை முனைய கருவி ரசீது வழங்குவதுடன், அனைத்து உர பரிவர்த்தனைகளையும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.

    உரிமத்தில் உர கொள்முதல் நிறுவனங்களின் "O" படிவங்களை இணைத்து அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரங்களை கொள்முதல் செய்வது, உரிமத்தில் அனு மதி பெற்ற இடங்களில் மட்டும் உரங்களை இருப்பு வைத்திருப்பது மற்றும் உரங்களை பதுக்கி வைக்காமல் இருப்பது ஆகியவனற்றை தவறாமல் பின்பற்ற சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லரை மற்றும் மொத்த உரவிற்பனையாளர்களுக்கும்அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்திட தடை செய்யப்பட்டுள்ளது.
    • சிறைத்தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நம் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாக்கவும், விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளர்களை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை விவகார எல்லையாகக் கொண்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு 5-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்திட தடை செய்யப்பட்டுள்ளது. கைத்தறி ரக ஒதுக்கீடு ஆணை அறிவிப்பின்படி, பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசைச்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 -ன் படி தண்டனைக்குரிய செயலாகும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த ஆய்வின் போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படடு, 6 மாத சிறைத்தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

    எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட விசைத்தறியாளர்கள் ைகத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்கவும், நீதிமன்ற அபராதம் மற்றும் சிறை தண்டனையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    மேலும், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், நான்காம் தளத்தில் உள்ள அறை எண்.408-ல் செயல்பட்டு வரும் உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தையோ அல்லது 0427-2417745 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசிரியர் மருதை மீது போக்சோ உள்ளிட்ட வழக்குப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    • குற்றவாளிக்கு சாதகமாக போராட்டம் செய்வதாக கூறி அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று ஊர் முக்கியஸ்தர்களை கலெக்டர் எச்சரித்தார்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள குண்ணாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதை (வயது 59). இவர் தோகைமலை அருகே உள்ள பொம்மாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதுகுறித்த தகவலின் பேரில், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் மருதை மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் ஆசிரியர் மருதை மீது போக்சோ உள்ளிட்ட வழக்குப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் மருதையை விடுதலை செய்யக்கோரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த கலெக்டர் பிரபு சங்கர், எஸ்.பி. சுந்தரவதனம், குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவ, மாணவிகளை மட்டும் தனியாக ஒரு அறைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்களை வரவழைத்து விசாரித்தனர்.

    அதன் பிறகு மாணவ, மாணவிகள் எழுதிக் கொடுத்த புகாரை அவர்களின் பெயர்களை வெளியிடாமல் படித்துக் காட்டினர். மாணவிகளிடம் ஆசிரியர் மருதை 3 ஆண்டுகளாக பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், அந்த பிரச்சினைகளை அப்போது பணியில் இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேசி முடித்து வைத்துள்ளனர்.

    இதற்கிடையே கடந்த வாரம் இப்பள்ளியில் பாலியல் சீண்டல், போக்சோ சட்டம் குறித்து நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் தனித்தனியாக தகவலை எழுதி கேட்டபோது, சில மாணவ, மாணவிகள் மருதை ஆசிரியர் எப்படியெல்லாம் பாலியல் சீண்டல் செய்தார் என்று எழுதிக் கொடுத்துள்ளனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, ஆசிரியர் மருதை கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆகையால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெற்றோர்களை கலைந்து போகச் சொல்லுங்கள். இல்லையென்றால் குற்றவாளிக்கு சாதகமாக போராட்டம் செய்வதாக கூறி அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று ஊர் முக்கியஸ்தர்களை கலெக்டர் எச்சரித்தார்.

    அதன் பிறகு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பொம்மநாயக்கன்பட்டி பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 வரை பரபரப்பு ஏற்பட்டது.

    • செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகியவைகள் பல்வேறு நடவடிக்கைக ள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம்அணியாமல் செல்லுதல், 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், முக்கியமாக கைப்பேசியில் பேசிக்கொண்டே இரண்டு சக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தை இயக்குவது பெரும்பாலான விபத்து க்களுக்கு காரணமாக அமைகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் கைப்பேசியில் பேசிக்கொண்டு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும்4 சக்கர வாகனங்களில் வாகன ஓட்டுநர் மட்டுமின்றி வாகனத்தில் பயணம் செய்பவர்களும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து, சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • உரங்களுடன் கூடுதல் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • விவசாயிகள் உரம்கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், அதிக விலைக்கு உரம் விற்பனை செய்பவர்கள் குறித்த புகார்கள் தேனி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகளின் விருப்பம் இன்றி உரங்களுடன் கூடுதல் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தேனி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா 1021 டன், டி.ஏ.பி 466 டன், பொட்டாஸ் 642 டன், சூப்பர் பாஸ்பேட் 363 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2844 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தனியார் உரக்கடைகளில் விவசாயிகளின் விரும்பம் இன்றி உரங்களுடன் கூடுதல் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. மானிய விலை உரங்களை விவசாயிகள் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பயிர்சாகுபடி பரப்பளவிற்கு ஏற்ப உரங்களை பரிந்துரை செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

    இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் உரம்கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், அதிக விலைக்கு உரம் விற்பனை செய்பவர்கள் குறித்த புகார்கள் தேனி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கண்காணிப்புக் குழுவி னர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் தனியார் இல்லங்களை சார்ந்தவர்கள் 31ந் தேதி க்குள் தங்களது இல்லங்களை முறையாக பதிவு செய்திட வேண்டும் என தெரி வித்தார்.

    தேனி:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் தங்கும் தனியார் இல்லங்களை கண்காணிப்பது குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவி னர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசு குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் இல்லங்களை முறையாக கண்காணித்திடும் பொருட்டு, தமிழக அரசின் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் புதியதாக தொடங்கிட வுள்ளவர்கள், புதியதாக பதிவு செய்திடவும், ஏற்கனவே பதிவு செய்தவ ர்கள் புதுப்பிப்பதற்கான பதிவுகளை உரிய சான்றி தழ்களுடன் வருகிற 31ந் தேதிக்குள் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தனியார் இல்ல ங்களை பதிவு செய்வதற்கான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

    இல்லங்களின் பதிவு மற்றும் பாதுகாப்பு, உட்கட்ட மைப்பு வசதிகள் குறித்து மாவட்ட அளவிலான குழுவினர்கள் முறையாக கண்காணித்திடவும், தொடர் ஆய்வு மேற்கொ ண்டு அதன் அறிக்கையினை சமர்ப்பித்திட வேண்டும்.

    இந்த ஆய்வுகளின் போது, இல்லங்களை முறையாக பதிவு செய்யாதது போன்ற ஏதேனும் குறை பாடுகள் கண்டறியப்பட்டால் இல்லங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளையும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டைனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதித்திடவும், தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்திட தவறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபாரதம் விதித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    எனவே தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் தனியார் இல்லங்களை சார்ந்தவர்கள் 31ந் தேதி க்குள் தங்களது இல்லங்களை முறையாக பதிவு செய்திட வேண்டும் என தெரிவித்தார்.

    • பெண் குழந்தைகளுக்கான விடுதிகள் பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான இல்லங்கள்ம ற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014-ன்படி பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும்.
    • உரிமம் பெறாத விடுதிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும்.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தனியார் மற்றும்

    தனி நபர் ஆகியோரால் மகளிர் தங்கும் விடுதிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்கான விடுதிகள் பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான இல்லங்கள், சிறார் இல்லங்கள் பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்த விடுதிகள், நடத்தும் நிறுவனங்கள், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014-ன்படி பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும். இவ்வுரிமம் பெறாத விடுதிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும்.

    எனவே உரிமம் பெறாத விடுதிகள் https://tnswp.comஎன்ற இணையதளம் வழியாக, உரிய ஆவணங்களுடன் வருகின்ற 30.08.2022 குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாத விடுதிகள் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் விடுதியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள திருச்சி மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் 0431-2413796 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெ க்டர்முரளிதரன் தலைமை யில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    தேனி மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 829.80 மி.மீ ஆகும். தற்பொழுது வரை 109.58 மி.மீ மழை பெறப்பட்டு ள்ளது. இது மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 72.78 மி.மீ அதிகமாகும்.

    வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடப்பு பருவத்திற்கு விவசாயி களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு நெல் விதைகள் 65.4 மெ.டன்னும், பயறு வகை விதைகள் 14.1 மெ.டன்னும், எண்ணெய்வி த்துப் பயிர் விதைகள் 27.8 மெ.டன்னும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1174 மெ.டன்னும், பொட்டாஷ் 835 மெ.டன் மற்றும் கலப்பு உரங்கள் 3256 மெ.டன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட நிறுவன ங்களை மாத ஒதுக்கீட்டி ன்படி விநியோகம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உரம் கிடைப்பதில் பிரச்சினை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது பற்றி வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு புகார் அளிக்க லாம். மேலும் ஒரு உரத்துடன் பிற உரங்களை வாங்கிட விவசாயிகளை கட்டாய ப்படுத்தும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்ய நட வடிக்கை கள் மேற்கொள்ள ப்படும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செய ல்படுத்தப்படும் சொட்டுநீர் பாசன திட்டத்திற்கான மானியத் தொகை, பிம்.எம்.கிஷான் தொகை விவசாயி களுக்கு விரைந்து கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும், முருங்கை வளர்ப்பு திட்டத்திற்கு முன்னுரிமை, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் அனைத்து மக்களு க்கும் பயன்பெறும் வகை யில் செயல்படுத்திடவும், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியை பல்கலைக்கழ கமாக உயர்த்திட வேண்டும்.

    மேலும், அரசுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்திட வும், கொள்முதல் நிலைய ங்களில் வியாபாரிகளின் தலையீட்டை தடுத்து விவசாயிகள் பயன்பெற வழிவகை செய்திடவும், நெல் கொள்முதல் நிலை யங்களில் ஏற்படும் முறை கேட்டினை தடுக்க சுமைப்பணியாளர்களை டெண்டர் முறையில் தேர்ந்தெடுத்திடவும், படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயி கள் கலெக்டரிடம் முன் வைத்தனர்.

    விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயி களுக்கு தெரிவிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

    • விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015படி தங்களது விடுதிகளை பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
    • பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் - 621704, தொலைப்பேசி எண் 04329-296239 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களினால் நடத்தப்பட்டு வரும் 18 வயதிற்குட்பட்வர்களுக்கான தங்கும் இல்லங்கள் மற்றம் விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015படி தங்களது விடுதிகளை பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் இல்லங்கள் பதிவு செய்வதற்கு பதிவு கட்டணமாக ரூ.3000/- மாவட்ட கலெக்டர், அரியலூர் என்ற பெயரில் வரைவேலை எடுத்து வழங்கப்பட வேண்டும் எனவும்,

    பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் - 621704, தொலைப்பேசி எண் 04329-296239 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

    பதிவு பெறாமல்நடத்தப்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இத் தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர்ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    ×