search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள், பெண்கள் முதியோர்கள் தங்கும் தனியார் இல்லங்களை முறையாக பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை  கலெக்டர் எச்சரிக்கை
    X

    கண்காணிப்பு குழுவினர்களுடன் கலெக்டர் முரளிதரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    குழந்தைகள், பெண்கள் முதியோர்கள் தங்கும் தனியார் இல்லங்களை முறையாக பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

    • கண்காணிப்புக் குழுவி னர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் தனியார் இல்லங்களை சார்ந்தவர்கள் 31ந் தேதி க்குள் தங்களது இல்லங்களை முறையாக பதிவு செய்திட வேண்டும் என தெரி வித்தார்.

    தேனி:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் தங்கும் தனியார் இல்லங்களை கண்காணிப்பது குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவி னர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசு குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் இல்லங்களை முறையாக கண்காணித்திடும் பொருட்டு, தமிழக அரசின் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் புதியதாக தொடங்கிட வுள்ளவர்கள், புதியதாக பதிவு செய்திடவும், ஏற்கனவே பதிவு செய்தவ ர்கள் புதுப்பிப்பதற்கான பதிவுகளை உரிய சான்றி தழ்களுடன் வருகிற 31ந் தேதிக்குள் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தனியார் இல்ல ங்களை பதிவு செய்வதற்கான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

    இல்லங்களின் பதிவு மற்றும் பாதுகாப்பு, உட்கட்ட மைப்பு வசதிகள் குறித்து மாவட்ட அளவிலான குழுவினர்கள் முறையாக கண்காணித்திடவும், தொடர் ஆய்வு மேற்கொ ண்டு அதன் அறிக்கையினை சமர்ப்பித்திட வேண்டும்.

    இந்த ஆய்வுகளின் போது, இல்லங்களை முறையாக பதிவு செய்யாதது போன்ற ஏதேனும் குறை பாடுகள் கண்டறியப்பட்டால் இல்லங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளையும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டைனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதித்திடவும், தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்திட தவறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபாரதம் விதித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    எனவே தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் தனியார் இல்லங்களை சார்ந்தவர்கள் 31ந் தேதி க்குள் தங்களது இல்லங்களை முறையாக பதிவு செய்திட வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×