search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் இன்னசென்ட் திவ்யா"

    ஊட்டியில் வன ஊழியர் உள்பட 2 பேரை தாக்கிய சிறுத்தைகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பார்வையிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தூனேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு கூடலூர் தேவாலாவை சேர்ந்த வேல்முருகன் (வயது 38) உள்பட 6 தொழிலாளர்கள் பச்சை தேயிலையை பறிக்கும் பணியில் நேற்று மதியம் ஈடுபட்டனர். 

    அப்போது சிறுத்தை ஒன்று திடீரென்று அங்கு வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அந்த சிறுத்தை வேல்முருகனை விரட்டிச்சென்று தாக்கியது. தலையில் லேசான காயம் அடைந்த வேல்முருகன் சிகிச்சைக்காக தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்த தகவலின் பேரில் வனச்சரகர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், அந்த சிறுத்தை தேயிலை தோட்டத்தில் பதுங்கி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது தேயிலை தோட்டத்தில் 2 குட்டிகளுடன் சிறுத்தை இருந்தது. இதை பார்த்து வனத்துறையினர் சிறுத்தையை விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசம் அடைந்த சிறுத்தை வனவர் திருமூர்த்தியை (35) தாக்கிவிட்டு குட்டியுடன் தப்பி சென்றது. இதில் அவருக்கு முதுகிலும், தலையிலும் லேசான காயம் ஏற்பட்டது. 

    இதையடுத்து வனத்துறையினர் திருமூர்த்தியை மீட்டு தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேரை சிறுத்தை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த வேல்முருகனை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தங்கினார். கூட்டத்தில் குடும்ப அட்டை, மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 264 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

    கூட்டத்தில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கால் கிராமத்தை சேர்ந்த ஆனந்தபிரபு, கூடலூர் காசிம் வயல் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கலெக் டரின் விருப்புரிமை நிதியிலிருந்து பெட்டிக்கடை வைக்க தலா ஒரு பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ஆக மொத்தம் ரூ. 40 ஆயிரத்திற்கான காசோலையினையும், பந்தலூர் வட்டம் நெல்லியாளம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் மனைவி புஷ்பவள்ளிக்கு மருத்துவ செலவுக்காக மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

    கோவையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனால் 2017-2018-ம் ஆண்டிற்கான நமது மாவட்டத்தில் கூடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவாலா நடுநிலைப்பள்ளி, குன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட அதிகரட்டி தொடக்க பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பள்ளி வளர்ச்சிக்காக தலா ஒரு பள்ளிக்கு ரூ.1 லட்சம்

    வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையும், கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதை தலைமை ஆசிரியர்கள் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றனர்.

    கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்ட) முருகன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குழந்தைவேலு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்று ச்சூழலை மாசுபடுவதை தடுக்கவும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக பசுமைப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ் டிக் பொருட்கள் அரசி தழில் வெளியிடப்பட்டது. அவைகள் அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள், முள்கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சும் குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், ஸ்டைலோபோம் தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மகோல், நெய்யப்படாத வகையிலான பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள், பிளாஸ்டிக் கையுறைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள், சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்படும் பொருட்கள், பூச்செண்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் சுற்றப்பயன்படும் பிளாஸ் டிக்குகள், லாமினே‌ஷன் செய்யப்பட்ட காக்கி தாள்கள், லாமினே‌ஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் போன்றவைகள் ஆகும்.

    மாவட்டத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு 51 மைக்ரானுக்கு மேற்பட்ட கவர்கள் (மளிகை தேயிலை மற்றும் பேக்கரி பொருட்களை பேக்கிங் செய்ய மட்டும், முடிச்சு கவர்களாக பயன்படுத்தக்கூடாது. உணவகங்களில் பயன்படுத்தும் சில்வர் பாயில் கண்டெயினர்கள் மற்றும் பேக்கரி பொருட்கள், சாக்லெட் பேக்கிங் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் கண்டெயினர்கள் , கட்டை கைப்பிடியுடன் கூடிய நெய்யப்படாத பைகள் ஆகியவற்றிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பொருட்கள் கண்டறியும் வரை இந்த விதிவிலக்கு அளிக்கப்படு கிறது. இத்தடையை செவ்வனே பயன்படுத்தி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் ஒத்து ழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ ராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சீருடையுடன் கூடிய பிளேசர் வழங்கி குழந்தைகளுடன் கலந்துரையாடி கூறியதாவது,

    குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தோடும், கனவோடும் வாழ வேண்டும். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியமும் கனவும் இருக்கும். அந்த லட்சியத்தை அடைய வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும்.

    படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் எடுப்பது மட்டுமல்லாமல் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மென் மேலும் உயர்கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்து, உங்கள் கனவை நிறைவேற்றி வாழ்வில் முன்னேற முடியும்.

    உங்களுக்கு பள்ளி பருவத்திலும் சரி எப்பொழுதும் ஏதேனும் ஒரு வகையில் சிரமங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நாம் நினைத்ததை அடைய வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

    காலம் மாறிக்கொண்டே போகின்றது எனவே காலத்திற்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் மாற்றி கொண்டு உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    மேலும் 165 குழந்தைகளுக்கு சீருடையுடன் கூடிய பிளேசர் உடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மேல் அக்ரஹாரம் பகுதியில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைமன்னன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோடை விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    ஊட்டி:

    கோடை விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ஜூணன், கோபால கிருஷ்ணன், குன்னூர் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, ஊட்டி எம்.எல்.ஏ., கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கண்காட்சியில் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை ஆகிய நிறத்தால் ஆன 30 ஆயிரம் ரோஜாக்களால் பிரமாண்ட இந்தியா கேட் அமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது தவிர ஜல்லிக்கட்டுக்காளை, மயில்,மாம்பலம், சோட்டா பீம், ரங்கோலி ஆகிய மலர் அலங்காரம் சிறப்பாக இருந்தது. தோட்டக் கலைத் துறை சார்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ரோஜா கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    கண்காட்சியில் 40 ஆயிரம் மலர்ச்செடிகளில் பூத்துக்குலுங்கும் மினியச்சர், இருவண்ண மலர்கள் ஆகியவை மெய்மறக்க செய்தது. சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நாளை மாலை (ஞாயிற்றுக்கிழமை) சிறந்த அரங்கம், சிறந்த பூங்கா ஆகியவைகளுக்கு பரிசு அளிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் ரோஜா கண்காட்சியை காண மாவட்டத்தின் பிற பகுதிகள் மற்றும் சமவெளிப்பகுதி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். ரோஜா கண்காட்சியையொட்டி ஊட்டி நகரம் களை கட்டியது.

    ×