search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்தாய்வு கூட்டம்"

    • மாநில கல்வி கொள்கை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    மாநிலகல்விக் கொள்கையின் கலந்தாய்வுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டிய தங்களது கருத்துகளை மனுவாக அளித்தும், கோரிக்கை வைத்தும் பேசினர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள், மனுக்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் கூறினார். கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    • 6,7,8,16 ஆகிய வார்டுகளுக்கு நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் பகுதி செயலாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வார்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி பேசினார்.

    திருப்பூர் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதி கழகத்திற்குட்பட்ட 6,7,8,16 ஆகிய வார்டுகளுக்கு நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் சுகம் வீர.கந்தசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில் அ.ம.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் அ.விசாலாட்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வார்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி பேசினார்.

    மேலும் கட்சியில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகியும், புதிதாக இணைந்தவர்களையும் விசாலாட்சி சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் பகுதி கழக நிர்வாகிகள் ஜெயராஜ், ராஜாங்கம், கீதா, கருப்புசாமி, கோகுலம் மணி, சின்னக்காளை, கவியரசு, சரவணகுமார், பிரியானந்த், நாகேந்திரகுமார், ராஜேந்திரன், மகேஷ்குமார், சஞ்சீவ், சிவகுமார், கோபிநாத், சீதா, மனோன்மணி, பாரதி, ஸ்ரீதேவி, ஜெயகாந்த், செந்தில்குமார், சவுந்திரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட வேண்டும் என்றார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள், கொசு உற்பத்தி மூலம் வரக்கூடிய டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இந்த மழை கால நோய்கள் குறித்த அறிகுறிகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யக்கூடிய மழைநீர் தேங்கக்கூடிய பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்.

    மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களை உடனுக்குடன் கண்டறிந்து, மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்களை பதிவேற்றம் செய்திட வேண்டும். தனியார் மருத்துவமனைகளும் இதுகுறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    கிராம ஊராட்சி செயலர்கள், தங்கள் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு ஏதேனும் இருந்தால் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் காய்ச்சல் பாதித்த பகுதிகள், வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் தொற்றுநோய் உள்ளவர்களின் விபரங்களை அறிந்து உடனடியாக பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து, கொசுப்புழு மருந்து தெளிக்கும் பணியினை துரிதப்படுத்த வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் கொசு உற்பத்தியாகாமல் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    கிணறு மற்றும் டேங்கர் வாகனங்கள் மூலமாக விநியோகிக்கப்படும் தண்ணீரிலும் குளோரின் கலந்து விநியோகிக்க வேண்டும். இதனை களப்பணியாளர்கள் முறையாக உறுதிப்படுத்த வேண்டும். குடிநீர் விநியோகிக்கப்படும் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் போன்றவற்றில் உடைப்போ, பழுதோ இருக்கும்பட்சத்தில் தண்ணீர் வீணாவதுடன், கொசுப்புழு உற்பத்தியாகி நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட வேண்டும் என்றார்.

    • திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
    • திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. இந்த தொகுதியில் போக்குவரத்து நெரிசல் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.

    திருச்சி :

    திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் திருச்சி கிழக்கு தாசில்தார் கலைவாணி, மாநகராட்சி மண்டலம் 3-ன் தலைவர் மதிவாணன், மண்டலம் 2-ன் தலைவர் ஜெயநிர்மலா, வேளாண்மை துறை, மின்சாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. இந்த தொகுதியில் போக்குவரத்து நெரிசல் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.

    எனவே காவிரி பாலத்தில் இருந்து அண்ணா சிலை, தலைமை தபால் நிலையம மேல்மட்ட சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காந்தி மார்க்கெட் நெருக்கடி, குடிநீர் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் தெரிவித்தனர்.

    • வேளாண்மை விற்பனை கட்டிடத்தில் நடந்தது
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் திருப்பத்தூர் சேலம் மெயின் ரோட்டில் உள்ள வேளாண்மை விற்பனை கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயலாளர் சு.கண்ணன் தாங்கினார்.

    விற்பனை கூட கண்காணிப்பாளர் திருமகள் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சி. பச்சையப்பன் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • ராமநாதபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் 300 கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது:-

    கிராம நிா்வாக அலுவலா்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். மனுக்கள் மீது உரிய கவனம் செலுத்தவேண்டும். முதியோா் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது அக்கறையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிராம மக்களிடம் அங்குள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து அவற்றைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பது அவசியம். கிராமத்தில் கொரோனா பரவல் தடுப்பூசி செலுத்தியவா்கள் விவரம், பள்ளிக் கட்டடங்கள் ஆய்வு ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் பங்கேற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் தங்களது கிராமப் பிரச்னைகள், மக்கள் கோரிக்கை குறித்தும் கலெக்டரிடம் முறையிட்டனா்.

    கூட்டத்தில் 300 கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சிகணேசன், கலெக்டர் நோ்முக உதவியாளா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • கிராம அலுவலர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அபிநயா தலைமையில் இந்த கலந்தாய்வு நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாக்களை சேர்ந்த கிராமநிர்வாக அலுவலகர்களுக்கான பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது.

    திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அபிநயா தலைமையில் இந்த கலந்தாய்வு நடந்தது. ஏ பிரிவு கிராமத்தில் ஓராண்டு பணிபுரிந்த வி.ஏ.ஓ.க்கள், பி பிரிவு கிராமத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த வி.ஏ.ஓ.க்கள் இதில் கலந்து கொண்டனர். திருமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட பணிமாறுதல் செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்கள் விவரம் வருமாறு:-

    காங்கேயநத்தம் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ. ரமேஷ் அங்கிருந்து வடகரைக்கு பணிமாறுதல் பெற்றார். வடகரை வி.ஏ.ஓ. சுகுமார், திரளி பிட் 1 வி.ஏ.ஓ.வாக மாற்றப்பட்டார். மைக்குடி வி.ஏ.ஓ. ராஜா திருமங்கலம் நகருக்கும், திருமங்கலம் பாலமுருகன், மைக்குடி வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதல் பெற்றனர்.

    கரடிக்கல் சேகரன், குன்னனம்பட்டிக்கும் அங்கிருந்த பூமாரி கரடிக்கல் வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதல் பெற்றனர். திரளி பிட் 1 ரவிச்சந்திரன், கிண்ணி மங்கலத்துக்கு வி.ஏ.ஓ.வாக பணிமாறுதல் பெற்றார்.

    கள்ளிக்குடி தாலுகாவில் தூம்பகுளம் முருகேசன், குராயூர் பிட் 1 வி.ஏ.ஓ.வாக செல்கிறார். குராயூர் பிட் 1 வைரன் இடையநத்தம் வி.ஏ.ஓ.வாக மாறியுள்ளார். இடையநத்தம் அருணோதயா, மருதங்குடி வி.ஏ.ஓ.வாக சென்றுள்ளார்.

    திருப்பரங்குன்றம் தாலுகா முல்லாகுளம் சக்திவேலு, மேலநெடுங்குளம் வி.ஏ.ஓ.வாகவும், மேலநெடுங்குளம் தமிழரசி முல்லாகுளம் வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதலாகி சென்றனர். 

    • சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்கள் மற்றும் தேவைகளை எடுத்துரைத்தனர்

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பார்ட்னர்ஸ் இன் சேன்ஜ் (பி.ஐ.சி.) நிறுவனம் மற்றும் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி குழு இணைந்து பல்துறை கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார்.இதில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சவுந்திரலட்சுமி, சி.டி.பி.ஓ.போர்ஷியாரூபி,வட்டார மருத்துவ அலுவலர் மோகன்,குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புவனேஸ்வரி,சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரத்தின‌குமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தங்கள் துறையின் கீழ் உள்ள சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் பற்றியும் விரிவாக விளக்கி கூறினார்கள்.மேலும் இதில் பஞ்சாயத்து தலைவர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள், தலைமையாசிரியர்கள்மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்கள் மற்றும் தேவைகளை எடுத்துரைத்தன.

    ×