கிராம அலுவலர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு

கிராம அலுவலர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அபிநயா தலைமையில் இந்த கலந்தாய்வு நடந்தது.
கிராம அலுவலர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு
Published on

திருமங்கலம்

திருமங்கலம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாக்களை சேர்ந்த கிராமநிர்வாக அலுவலகர்களுக்கான பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது.

திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அபிநயா தலைமையில் இந்த கலந்தாய்வு நடந்தது. ஏ பிரிவு கிராமத்தில் ஓராண்டு பணிபுரிந்த வி.ஏ.ஓ.க்கள், பி பிரிவு கிராமத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த வி.ஏ.ஓ.க்கள் இதில் கலந்து கொண்டனர். திருமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட பணிமாறுதல் செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்கள் விவரம் வருமாறு:-

காங்கேயநத்தம் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ. ரமேஷ் அங்கிருந்து வடகரைக்கு பணிமாறுதல் பெற்றார். வடகரை வி.ஏ.ஓ. சுகுமார், திரளி பிட் 1 வி.ஏ.ஓ.வாக மாற்றப்பட்டார். மைக்குடி வி.ஏ.ஓ. ராஜா திருமங்கலம் நகருக்கும், திருமங்கலம் பாலமுருகன், மைக்குடி வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதல் பெற்றனர்.

கரடிக்கல் சேகரன், குன்னனம்பட்டிக்கும் அங்கிருந்த பூமாரி கரடிக்கல் வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதல் பெற்றனர். திரளி பிட் 1 ரவிச்சந்திரன், கிண்ணி மங்கலத்துக்கு வி.ஏ.ஓ.வாக பணிமாறுதல் பெற்றார்.

கள்ளிக்குடி தாலுகாவில் தூம்பகுளம் முருகேசன், குராயூர் பிட் 1 வி.ஏ.ஓ.வாக செல்கிறார். குராயூர் பிட் 1 வைரன் இடையநத்தம் வி.ஏ.ஓ.வாக மாறியுள்ளார். இடையநத்தம் அருணோதயா, மருதங்குடி வி.ஏ.ஓ.வாக சென்றுள்ளார்.

திருப்பரங்குன்றம் தாலுகா முல்லாகுளம் சக்திவேலு, மேலநெடுங்குளம் வி.ஏ.ஓ.வாகவும், மேலநெடுங்குளம் தமிழரசி முல்லாகுளம் வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதலாகி சென்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com