search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா மந்திரி"

    மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை என்று கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். #Karnataka #Mekedatu
    கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. நாங்கள் தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை. நாங்கள் சகோதர மாநிலம்.

    மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும். இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம். கர்நாடக மக்களுக்கு குடிநீர் தரவேண்டியது எங்கள் கடமை. எனவே அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம்.

    மொத்த கர்நாடக மக்களும் ஆதரவாக இருப்பார்கள். கர்நாடகாவில் 6 கிராம மக்கள் எதிர்ப்பு என்பதில் உண்மையில்லை. திட்டம் வகுத்த பின் தமிழக அரசு உணர்ந்து கொள்ளும். மேகதாது அணையால் 67 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்’’ என்றார்.
    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச தயாராக இருப்பதாக கர்நாடக நீர் பாசன மந்திரி சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister
    பெங்களூர்:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் மேலும் ஒரு பிரமாண்ட அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ரூ.5912 கோடியில் மேகதாது அணையை கட்டி முடிப்பதற்கு வரைவுத் திட்டம் ஒன்றை கர்நாடகா அரசு தயாரித்துள்ளது.

    மேகதாது என்ற இடம் ஒகேனக்கல்லுக்கு முன்பாக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அது அடர்ந்த காட்டுப் பகுதியாகும். அங்கு இயற்கையாக இரு பக்கங்களிலும் அமைந்துள்ள பிரமாண்ட மலைகளுக்கு மத்தியில் காவிரி ஆறு பொங்கி வருகிறது.

    அந்த இரு பக்க மலையும் சுமார் 1000 அடி உயரம் கொண்டது. ஒற்றைக்கல் என்று அழைக்கப்படும் அந்த மலைகளுக்கு இடையேதான் புதிய அணையை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டு விட்டால், தமிழ்நாட்டுக்குள் காவிரி தண்ணீர் சுத்தமாக வராது.

    இத்தகைய அபாயத்தை உணர்ந்து தமிழக மக்கள் மேகதாது திட்டத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் வரைவுத் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 22-ந்தேதி திடீரென ஒப்புதல் வழங்கியது. மின்சாரம் தயாரிக்கவே இந்த அணையை கட்டுவதாக கூறி கர்நாடகா அரசு ஒப்புதலை பெற்றுள்ளது.

    இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் வரும் 4-ந்தேதி திருச்சியில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

    இந்த நிலையில் மேகதாது பகுதியில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது. மனு மீதான விசாரணை முடியும் வரை மேகதாது அணை தொடர்பான எந்த அடுத்தக்கட்ட பணிகளையும் கர்நாடகா அரசு மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி உள்ளது.

    தமிழக அரசின் நடவடிக்கையால் கர்நாடகா அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழக அரசை சமரசம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் உதவியை நாடவும் கர்நாடக அரசு திட்டமிட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகா-தமிழ்நாடு சுமூக தீர்வு ஏற்பட மத்திய அரசு உதவ வேண்டும். இரு மாநில அரசுகளும் இது தொடர்பாக பேச மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசுடன் பேச கர்நாடகா தயாராக இருக்கிறது.

    மேகதாது அணை பற்றிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தயாராகி விடும். அந்த அறிக்கையை தமிழகத்திடம் கொடுக்க விரும்புகிறோம். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை பற்றி தமிழக அரசிடம் பேச உள்ளோம். இதற்காக தமிழக அரசிடம் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    மத்திய அரசு நீர்வளத் துறை மந்திரியும் இத்தகைய ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து உதவ வேண்டும்.



    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசும், தமிழக அரசும் மோதிக்கொள்ள தேவையில்லை என்று நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வந்ததும் தமிழக அரசு அதை பார்வையிடலாம்.

    இந்த திட்டத்தால் கர்நாடக அரசுக்கு பெரிய அளவில் எந்த லாபமும் இல்லை. தமிழக அரசுக்குதான் உண்மையில் லாபமாக இருக்கும்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக பருவ மழை பெய்யும்போது ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் கடலில்தான் வீணாக சென்று கலக்கிறது. அத்தகைய தண்ணீரை இந்த அணையில் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.

    இவ்வாறு கர்நாடக நீர் பாசன மந்திரி சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister


    மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் மேகதாதுவில் புதிய அணை விரைவாக கட்டப்படும் என்றும், தமிழகத்திற்கு இதுவரை 310 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
    பெங்களூரு:

    கர்நாடக மருத்துவ கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 67 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு புதிய அணை கட்டுவோம். அதில் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு போக மீதமுள்ள நீர் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்.

    காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் தமிழகத்திற்கு நீர் வழங்க முடியும். 4 ஆயிரம் ஏக்கர் நிலம் அணை தேக்க நீரில் மூழ்கும். இதில் வனம், வருவாய் மற்றும் விவசாய நிலங்கள் அடங்கும். நடப்பு ஆண்டில் இதுவரை 310 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த காலக்கட்டத்தில் 82 டி.எம்.சி. நீர் மட்டுமே திறந்துவிட்டு இருக்க வேண்டும். ஆனால் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    புதிய அணை கட்ட ரூ.6,000 கோடி நிதி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் நோக்கத்திற்காக தான் மேகதாதுவில் மாநில அரசு அணை கட்டுகிறது. மேகதாதுவுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளோம்.

    இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
    ×