search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்"

    • நிறை புத்தரிசி பூஜை 4-ந் தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பவுர்ணமி, மார்கழி ஊஞ்சல் உற்சவம், சித்திரை விசு கனி காணுதல் உள்ளிட்ட பல்வேறு விழா களும் வழிபாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடைபெறும்.

    ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியர் அரண் மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும். நெற் பயிர்கள் செழித் தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண் டும் என்பதற்காக இந்த நிறை புத்தரிசி பூஜை நடத் தப்படுகிறது.

    இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை வருகிற 4-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடக்கிறது. அன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவி லுக்கு கொண்டுவந்து சேர்க்கப்படும். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    அதன்பின்னர் நெற்கதிர் கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்து கின்றனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப் படுகிறது.

    பின்னர் அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது.இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள். இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவ தும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். மேலும் இந்த நெற்கதிர் மணிகளை வயலில் தூவி னால் அந்த போகம் சாகு படி செழித்தோங்கும்.

    நிறை புத்தரிசி பூஜை வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவைநடக்கிறது.

    நிறை புத்தரிசி பூஜை யையொட்டி பகவதி அம்ம னுக்கு தங்க கவசம் வைரக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக் கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
    • 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்ட பத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டி யல் மூலம் கிடைக்கும் வரு மானம் மூலமும் இந்த அன்ன தான திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல்நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச் சந்திரன் ஆகியோர் முன்னி லையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    இதில் காணிக்கையாக ரூ.49ஆயித்து193வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவில் வளாகத் தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப் படவில்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

    • 1-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது
    • பூஜை ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுகிறது.

    இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வழங்கும் தங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்ப டும். பின்னர் அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க தங்க குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளியிருக்கும் கருவறைக்குள் கொண்டு செல்கிறார்கள். அங்குதங்க குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    இந்த களப அபிஷேகத்தை மாத்தூர்மட தந்தூரி சங்கர நாராயணரூ நடத்துகிறார். பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபி ஷேகமும் நடக்கி றது இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல மறுநாளான 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை12 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது.

    இந்த களப பூஜை நிறை வடைந்த பிறகு மறுநாள் 13-ந்தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • கோவில் தீபாரதனை நேரங்களில் இந்த கோவிலின் வடக்கு நுழைவு வாசல் முன்பு உள்ள கோபுர பெரிய மணி ஒலிக்கப்படுவது வழக்கம்.
    • கடந்த சில மாதங்களாக இந்த பெரிய மணி பழுதுபட்டு கிடப்பதால் ஒலிப்பது இல்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த திருக்கோவில் திருநடை தினமும் 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு நடை சாத்தப்படும். அதே போல மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8-30 மணிக்கு திருநடை திருகாப்பிடப்படும்.

    கோவில் தீபாரதனை நேரங்களில் இந்த கோவிலின் வடக்கு நுழைவு வாசல் முன்பு உள்ள கோபுர பெரிய மணி ஒலிக்கப்படுவது வழக்கம். கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் இந்த மணியின் ஓசை கணீர் என ஒலிக்கும்.

    இந்த பெரியமணி ஓசை கேட்கும்போது சுற்று வட்டார பொதுமக்களும் பக்தர்களும் கோவிலில் தீபாராதனை நடக்கிறது என்பதை அறிவார்கள். உடனே சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பக்தர்களும் கோவிலுக்கு சாமி கும்பிட விரைந்து செல்வார்கள்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த கோவிலின் நுழைவு வாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி பழுதுபட்டு கிடப்பதால் ஒலிப்பது இல்லை. தற்போது வைகாசி விசாக பெருந்திருவிழா நடந்து வரும் வேளையிலும் இந்த நுழைவு வாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி தீபாராதனை நேரங்களில் இதுவரை ஒலிக்கப்படவில்லை.

    இதனால் பக்தர்களும் பொதுமக்களும் மனவேதனை அடைந்து உள்ளனர். எனவே வைகாசி விசாகபெருந்திருவிழா முடிவதற்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வடக்குப் பிரதான நுழைவாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி ஓசை தீபாராதனை நேரங்களில் ஒலிக்க செய்வதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கன்னியாகுமரி ரதவீதிகளில் வடிகால் அமைத்து சாலைகள் சீரமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம்18-ந் தேதி தொடங்கியது.
    • கிடப்பில் போடப்பட்ட ரதவீதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரத வீதிகள் கடந்த சில ஆண்டுகளாக மோசமான நிலையில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 50லட்சம் செலவில் கன்னியாகுமரி ரதவீதிகளில் வடிகால் அைமத்துசாலைகள் சீரமைக்கும் பணி கடந்த ஜனவரிமாதம்18-ந்தேதி தொடங்கியது.

    ஆனால் பணி தொடங்கி 4 மாதங்களாகியும் இன்னும் முடிவ டையவில்லை. கடந்த 3 மாதங்களாக ரதவீதிகள் சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன.


    இந்தநிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாகடந்த3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம்திருவி ழாவான11-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. ரத வீதிகள் வழியாகத் தான் தேர் பவனி வரும் என்பதால் ரத வீதிகளை சீரமைக்கும் பணியை விரைந்து முடித்து தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் கிடப்பில் போடப்பட்ட ரதவீதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த பணியை அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை குழுமத் தலைவர் தாமரைபாரதி தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல், உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள்சி.எஸ்.சுபாஷ், ஆனிரோஸ்தாமஸ், பூலோக ராஜா, இக்பால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×