search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகாசி விசாக திருவிழா தேரோட்டத்தையொட்டி  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ரத வீதிகள் சீரமைப்பு பணி தொடங்கியது
    X

    வைகாசி விசாக திருவிழா தேரோட்டத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ரத வீதிகள் சீரமைப்பு பணி தொடங்கியது

    • கன்னியாகுமரி ரதவீதிகளில் வடிகால் அமைத்து சாலைகள் சீரமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம்18-ந் தேதி தொடங்கியது.
    • கிடப்பில் போடப்பட்ட ரதவீதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரத வீதிகள் கடந்த சில ஆண்டுகளாக மோசமான நிலையில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 50லட்சம் செலவில் கன்னியாகுமரி ரதவீதிகளில் வடிகால் அைமத்துசாலைகள் சீரமைக்கும் பணி கடந்த ஜனவரிமாதம்18-ந்தேதி தொடங்கியது.

    ஆனால் பணி தொடங்கி 4 மாதங்களாகியும் இன்னும் முடிவ டையவில்லை. கடந்த 3 மாதங்களாக ரதவீதிகள் சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன.


    இந்தநிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாகடந்த3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம்திருவி ழாவான11-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. ரத வீதிகள் வழியாகத் தான் தேர் பவனி வரும் என்பதால் ரத வீதிகளை சீரமைக்கும் பணியை விரைந்து முடித்து தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் கிடப்பில் போடப்பட்ட ரதவீதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த பணியை அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை குழுமத் தலைவர் தாமரைபாரதி தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல், உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள்சி.எஸ்.சுபாஷ், ஆனிரோஸ்தாமஸ், பூலோக ராஜா, இக்பால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×