search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பழுதான பெரிய மணியை சீரமைத்து ஒலிக்க செய்ய வேண்டும்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பழுதான பெரிய மணியை சீரமைத்து ஒலிக்க செய்ய வேண்டும்

    • கோவில் தீபாரதனை நேரங்களில் இந்த கோவிலின் வடக்கு நுழைவு வாசல் முன்பு உள்ள கோபுர பெரிய மணி ஒலிக்கப்படுவது வழக்கம்.
    • கடந்த சில மாதங்களாக இந்த பெரிய மணி பழுதுபட்டு கிடப்பதால் ஒலிப்பது இல்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த திருக்கோவில் திருநடை தினமும் 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு நடை சாத்தப்படும். அதே போல மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8-30 மணிக்கு திருநடை திருகாப்பிடப்படும்.

    கோவில் தீபாரதனை நேரங்களில் இந்த கோவிலின் வடக்கு நுழைவு வாசல் முன்பு உள்ள கோபுர பெரிய மணி ஒலிக்கப்படுவது வழக்கம். கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் இந்த மணியின் ஓசை கணீர் என ஒலிக்கும்.

    இந்த பெரியமணி ஓசை கேட்கும்போது சுற்று வட்டார பொதுமக்களும் பக்தர்களும் கோவிலில் தீபாராதனை நடக்கிறது என்பதை அறிவார்கள். உடனே சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பக்தர்களும் கோவிலுக்கு சாமி கும்பிட விரைந்து செல்வார்கள்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த கோவிலின் நுழைவு வாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி பழுதுபட்டு கிடப்பதால் ஒலிப்பது இல்லை. தற்போது வைகாசி விசாக பெருந்திருவிழா நடந்து வரும் வேளையிலும் இந்த நுழைவு வாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி தீபாராதனை நேரங்களில் இதுவரை ஒலிக்கப்படவில்லை.

    இதனால் பக்தர்களும் பொதுமக்களும் மனவேதனை அடைந்து உள்ளனர். எனவே வைகாசி விசாகபெருந்திருவிழா முடிவதற்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வடக்குப் பிரதான நுழைவாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி ஓசை தீபாராதனை நேரங்களில் ஒலிக்க செய்வதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×