search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான பணி"

    • இந்த கோவிலில் கூடுதலாக கட்டிடம் கட்ட வழிபாடு நடத்தும் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கினர்.
    • கல்லூரி நிர்வாகம் சார்பில், கோவில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கல்லூரியில் கலந்தாய்வு, சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இந்த கல்லூரி வளாகத்தில் பூக்கார தெருவில் உள்ள பொதுமக்கள் வழிபாடு நடத்தும் செங்கமலை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் இந்த கோவிலில் கூடுதலாக கட்டிடம் கட்ட வழிபாடு நடத்தும் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கினர். ஆனால் இதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இன்று பணியை தொடங்குவதற்காக மக்கள் சிலர் வந்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்த நகர துணை போலீஸ் ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில், கோவில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் தற்போது கல்லூரியில் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதனால் தற்போது கோவில் கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பூக்கார வழிபாடு நடத்தும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் இரு தரப்பினிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முடிவில் கலந்தாய்வு முடியும் வரை கோவில் கட்டுமான பணியை தொடங்கக்கூடாது என பேசி முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை பார்க்கலாம் என கூறினர். இதனால் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே காவிரி குடிநீர் குழாய் தொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை தியாகராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • காவிரி குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை பேரூராட்சி பகுதி மக்களுக்கு முசிறி அருகே அய்யம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீர் ஜெம்புநாதபுரம் கிராமத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து நீரேற்று நிலையம் மூலம் மேட்டுப்பாளையம் சென்று பின்னர் தா.பேட்டை பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    காவிரி குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக பேரூராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆணைக்கிணங்க முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் பரிந்துரையின் பேரில் ரூ.20 லட்சம் மதிப்பில் தா.பேட்டையில் காவேரி குடிநீருக்காக புதிதாக தரைமட்ட நீர் தேக்க தொட்டி (சம்ப்) அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தரைமட்ட குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், பேரூராட்சி துணைத்தலைவர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் இத்திட்டம் குறித்து வாழ்த்தி பேசினர்.

    விழாவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.கே.ஆர் சேகரன், கே.பெரியசாமி, நகர செயலாளர் தக்காளி தங்கராசு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி நிர்வாகிகள் பிரபாகரன், அரவன், கருணாநிதி, மகாமுனி, ராஜசேகரன், ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக தா.பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து என்.கருப்பம்பட்டி கொட்டம் பகுதிக்கு செல்லும் புதியசாலை சீரமைப்பு பணியையும் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    பொதுமக்களின் நீண்ட கால கேளிக்கையை நிறைவேற்ற பெரும் முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இறுதியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • வார்டுகளுக்கு கதவு, ஜன்னல் பொருத்தும் பணி, வயரிங் செய்து, தரைத்தளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • ஆகஸ்டு இறுதிக்குள் திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 850 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கலாம் என்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் நடப்பாண்டு ஜனவரியில் மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டது. மருத்துவப்படிப்புக்கான 100 இடங்கள் திருப்பூருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது 98 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரண்டுக்குமான பணி ஒரே நேரத்தில் துவங்கினாலும் மாணவர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மருத்துவ கல்லூரி பணி முடிந்து விரைவாக திறக்கப்பட்டு விட்டது.

    ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்டாலும் இந்தாண்டு மார்ச் மாதத்துக்கு பின்புதான் மருத்துவமனை பணி சுறுசுறுப்பாகியது. கடந்த மே மாதம் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் சட்டசபை நிதிக்குழுவினர் கட்டுமான பணிகளை பார்வையிட்டு சென்னைக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.இந்நிலையில் 6 தளங்களில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது வார்டுகளுக்கு கதவு, ஜன்னல் பொருத்தும் பணி, வயரிங் செய்து, தரைத்தளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வெளிவளாகத்தை சுற்றிலும் சுண்ணாம்பு பூச்சு பணி ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் தாராபுரம் ரோட்டில் இருந்து மருத்துவமனைக்குள் வரும் வழித்தடம், மருத்துவமனை சுற்றி பாதுகாப்புச்சுவர், மைய கட்டடத்துக்கான 2 நுழைவு வாயில்களுக்கு இறுதி கருத்துரு தயாராகியுள்ளது. ஓரிரு நாளில் இப்பணிகளும் துவங்கவுள்ளது.

    இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணி, 60 சதவீதம் நிறைவுற்ற நிலையில் நடப்பு மாத இறுதிக்குள் 90 சதவீத பணியை முடித்து விட ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு இறுதிக்குள் திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 850 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கலாம் என்றனர்.

    • வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொழுங்கி கட்டுமானப்பணியை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
    • அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலக பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் காவிரி உப கோட்ட சீர்காழி நீர்வளத் துறையின் மூலம் நடைபெறும் வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொ ழுங்கி கட்டுமானப்பணி, தென்னாம்பட்டினம் கிராமம் நாட்டு கண்ணி மண்ணி ஆற்றில் கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி மற்றும் காவிரி உபகோட்டம் பொறையார் காலமாநல்லூர் மஞ்சளாறு ஆற்றின் கடைமடை நீரொழுங்கி ஆகிய கட்டுமான பணிகளை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அனைத்துப் பணிகளையும் விரை வாக முடிக்குமாறுபொதுப்ப ணித்துறை அலுவலக பொறியாள ர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செய ற்பொறியாளர் பாண்டியன் சீர்காழி உப கோட்ட உதவி பொறியாளர்கள் சரவணன், வெங்கடேசன் ,உதவி பொறியாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×