search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை சீல்"

    • கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
    • 1,219 வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறப்பட்டுள்ளது.

    ஓசூர்:

    ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் தொழில் உரிமம் பெறாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, ஆணையாளர் சினேகா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் துப்பரவு ஆய்வாளர்கள் கிரி, ரமேஷ், துப்பரவு மேற்பார்வையாளர் கவுரிசங்கர் மற்றும் பணியாளர்கள், ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள 2 பிரியாணி கடைகள் மற்றும் ஒரு பேக்கரி என தொழில் உரிமம் பெறாமல் நடத்தி வந்த 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

    பின்னர், அந்த கடை உரிமையாளர்கள் தொழில் உரிமத்துக்கு ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பித்ததை தொடர்ந்து, மாலையில் அந்த கடைகளில் சீல் அகற்றப்பட்டது.

    இதுவரை மாநகராட்சி மூலம் 6,963 வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கியதில், இதுவரை 1,896 வணிக நிறுவனங்கள் மட்டுமே தொழில் உரிமம் பெற விண்ணப்பித்து, 1,219 வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறப்பட்டுள்ளது.

    328 வணிக நிறுவனங்கள் மாநகராட்சியிடம் விண்ணப்பித்தும், கேட்புத் தொகையினை இதுவரை ஆன்லைன் மூலம் செலுத்தவில்லை.

    எனவே மாநகராட்சி தொழில் உரிமம் பெற கடைக்காரர்கள், தொழில் நிறுவனங்கள் உடனடியாக, இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில், தொழில் உரிமம் பெறாத கடைகள், தொழில் நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மாநகராட்சி மூலம் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • 6 கடைகள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    ஓசூர்:

    ஓசூர் மாநகர ஆணையாளர் சினேகா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன், உதவி ஆணையாளர் டிட்டோ ஆகியோர் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஓசூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 20 நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தினர்.

    மேலும் மாநகராட்சி கடைகளில் கடை நடத்தும் 42 கடைக்காரர்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வெளிப்புறத்தில் கடைகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எல்லை, பெயிண்ட் மூலம் வரையப்பட்டு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே கடைகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே கடைகள் வைக்கப்பட்டால், அவை மாநகராட்சி மூலம் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெறாமல் ஓசூர் எம்.ஜி. ரோடில் இயங்கி வந்த 6 கடைகள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    • ஒரு ஓட்டல் அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிந்தது.
    • பரிசோதனைக்காக 6 ஓட்டல்களில் இருந்தும் உணவு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது.

    கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள 2 ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு சீல் வைத்தனர். மேலும் ஒரு ஓட்டல் அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிந்தது. அந்த ஓட்டல் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் இருந்த கெட்டுபோன உணவுகள், பழைய இறைச்சிகள், தவறான முறையில் பதபடுத்தபட்ட மற்றும் தடை செய்யபட்ட மசாலாக்கள், செயற்கை உணவு வண்ண பொடிகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பரிசோதனைக்காக 6 ஓட்டல்களில் இருந்தும் உணவு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது.

    • கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நிர்வாகத்திற்கு கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் மெத்தனமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • கோவில் நிர்வாகத்தினர் திருப்போரூர் போலீசார் அதிரடியாக 35 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலை, பஸ்நிலையம் அருகே பழைய மாமல்லபுரம் சாலை, இள்ளலூர் செல்லும் சாலைகளில உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நிர்வாகத்திற்கு கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் மெத்தனமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதிதாசன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், கோவில் நிர்வாகத்தினர் திருப்போரூர் போலீசார் அதிரடியாக 35 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

    இதனால் கடைக்காரர்களுக்கும் கோவில் நிர்வாகத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொரு கடைக்காரரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கோவில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தாமல் கடந்த 15 ஆண்டுகளாக மெத்தனமாக செயல்பட்டு வந்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகம் வாடகை பாக்கி செலுத்த சொல்லி பலமுறை எச்சரித்தும் செவி சாய்க்காத நிலையில் நேற்று அதிரடியாக கடைகளை பூட்டி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    • மகேஷ்வரன் வைத்துள்ள பெட்டிக்கடையில் சமீபத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் தின்பண்டங்கள் வாங்க வந்துள்ளனர்.
    • பொருட்கள் தரமாட்டேன். ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மாணவர்களிடம் மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் குறைந்த அளவில் பட்டியலின சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு திருமண விழாவில் பட்டியலினத்தவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதுதொடர்பாக ஒரு தரப்பினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மற்றொரு தரப்பினர் மீது அடிதடி வழக்கு பதிவானது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 2 தரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரையா என்பவரது மகன் மகேஷ்வரன் ஊர் நாட்டாமையாக செயல்பட்டதாகவும், அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்த ரூபன் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாகவும் கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மற்றொரு தரப்பினர் வைத்துள்ள கடைகளில் இருந்து பொருட்கள் வழங்கக்கூடாது என்று அவர்களுக்குள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மகேஷ்வரன் வைத்துள்ள பெட்டிக்கடையில் சமீபத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் தின்பண்டங்கள் வாங்க வந்துள்ளனர். அவர்களிடம் பொருட்கள் தரமாட்டேன். ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

    உடனே அந்த குழந்தைகளும் அப்பாவித்தனமாக கட்டுப்பாடா? அப்படி என்றால் என்ன? என்று கேட்டுள்ளனர். இந்த சம்பவங்களை மகேஷ்வரனும், அவரது நண்பரான ராமச்சந்திர மூர்த்தியும் சேர்ந்து வீடியோ பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த வீடியோவை தங்கள் சமுதாய வாட்ஸ்-அப் குரூப்பில் போட்டுள்ளனர். அந்த வீடியோ பரவி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு அனுப்பினர்.

    அவரது உத்தரவின்பேரில் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் விசாரணை நடத்தினார். அதன்பேரில் கரிவலம்வந்த நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனே பாஞ்சாங்குளத்திற்கு சென்றனர்.

    போலீசார் வருவதை அறிந்த மகேஷ்வரன் தலைமறைவானார். அதே நேரத்தில் வீடியோ எடுக்க உதவியதாக கூறப்பட்ட ராமசந்திரமூர்த்தியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, தாசில்தார் பாபு ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்டிக்கடைக்கு சென்று கடைக்கு 'சீல்' வைத்தனர்.

    ×